For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயோ பாவம்! தோனி இல்லாத சிஎஸ்கேவை வச்சு செஞ்சுட்டு போன மும்பை இந்தியன்ஸ்!! - மேட்ச் ரிப்போர்ட்!

சென்னை : தோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் என்றாலே தோல்வி என முடிவு செய்து கொள்ளலாம் என்பது போல இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆடிய போட்டி.

இந்தப் போட்டிக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதால் தோனி பங்கேற்கவில்லை. தோனி மட்டுமின்றி பாப் டு ப்லேசிஸ், ஜடேஜா ஆகியோரும் பங்கேற்கவில்லை.

விக்கெட் கீப்பிங் யார்?

விக்கெட் கீப்பிங் யார்?

அவர்களுக்கு பதில் துருவ் ஷோரி, முரளி விஜய், சான்ட்னர் அணியில் சேர்க்கப்பட்டனர். சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஆச்சரிய நகர்வாக அம்பதி ராயுடு விக்கெட் கீப்பிங் செய்தார்.

சுமாரான துவக்கம்

சுமாரான துவக்கம்

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. மும்பை அணிக்கு டி காக் 15 ரன்களில் வெளியேறி சுமாரான துவக்கம் அளித்தார். ஆனால், மற்றொரு துவக்க வீரர் ரோஹித் சர்மா போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார்.

ஹர்திக் திணறல்

ஹர்திக் திணறல்

ரோஹித்துக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார் ஈவான் லீவிஸ். அவர் 32 ரன்கள் எடுத்தார். ரோஹித் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பண்டியா, பொல்லார்டு ஜோடி அதிரடியாக ஆட முடியாமல் திணற, ஒருவழியாக 155 ரன்கள் எடுத்தது மும்பை.

சான்ட்னர் அசத்தல்

சான்ட்னர் அசத்தல்

ஜடேஜாவுக்கு பதில் இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்ற சான்ட்னர் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இம்ரான் தாஹிர், தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

படுமோசம்

படுமோசம்

சென்னை அணியின் பேட்டிங்கில் ஒன்றிரண்டு விஷயங்களை தாண்டி சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. முரளி விஜய் 38 ரன்கள் சேர்த்தார். பின்னர் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பிராவோ - சான்ட்னர்

பிராவோ - சான்ட்னர்

கடைசி நேரத்தில் பிராவோ 20, சான்ட்னர் 22 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப முயன்றனர். ஆனால், அது பலனளிக்கவில்லை. சென்னை அணி 17.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம்

மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம்

தரமான மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு கூட்டணிக்கு முன் சென்னை பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆடி விக்கெட்களை தாரை வார்த்தனர். தோனி இல்லாத சிஎஸ்கே என்றெல்லாம் பாவம் பார்க்காமல், மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று விட்டு சென்றது. மலிங்கா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா, க்ருனால் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Story first published: Saturday, April 27, 2019, 0:34 [IST]
Other articles published on Apr 27, 2019
English summary
IPL 2019 CSK vs MI : Chennai Super Kings vs Mumbai Indians 44th Match report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+