Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் தோனி இல்லாமல் ஆடும் சிஎஸ்கே.. தோனிக்கு இப்படி ஆகிப் போச்சே.. கவலையில் ரசிகர்கள்!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தோனி களமிறங்கவில்லை.

ஏற்கனவே, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆடவில்லை. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.

முதல் போட்டியில் ஓய்வு

முதல் போட்டியில் ஓய்வு

அப்போது முதுகில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக தோனி பங்கேற்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து தோனி ஒரு ஐபிஎல் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டார் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

அதன் பின் முதுகு பிடிப்பு பிரச்சனை ஓரளவு தீர்ந்து விட்டதாகக் கூறி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்கவில்லை. இதற்கு வேறு காரணம் கூறப்படுகிறது.

என்ன ஆச்சு?

என்ன ஆச்சு?

தோனிக்கு காய்ச்சல் இருந்ததால், மைதானத்துக்கே அவர் வரவில்லை என கூறப்படுகிறது. அதனால், சென்னை அணி தோனி இல்லாமல் இந்த சீசனில் இரண்டாவது போட்டியை சந்திக்க உள்ளது. சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

கடினம்

கடினம்

சென்னை அணி பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதுமானது. ஆனால், தோனி இல்லாத சென்னை அணி வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையே உள்ளது.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

தோனிக்கு முதுகு பிடிப்பு பிரச்சனை இன்னும் முழுமையாக குணமாகாத நிலையில், காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். பலரும் சமூக வலைதளங்களில் தோனி சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என பிரார்த்தனைகளை தொடங்கி விட்டனர்.

Story first published: Saturday, April 27, 2019, 10:55 [IST]
Other articles published on Apr 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+