Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி இருந்தாரு.. இப்ப இப்படி ஆயிட்டாரே.. ரசிகர்களை புலம்ப விட்ட சுரேஷ் ரெய்னா!!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது சந்திப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் தோனி பங்கேற்காத நிலையில், சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்தப் போட்டியில் பேட்டிங்கில் சென்னை அணி படுமோசமாக ஆடியது. ரெய்னா வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

முன்னாடி மாதிரி இல்லை

முன்னாடி மாதிரி இல்லை

நடப்பு ஐபிஎல் தொடரில் ரெய்னாவின் பேட்டிங் முந்தைய ஆண்டுகள் போல இல்லை என்ற பேச்சு கிளம்பி உள்ள நிலையில், ரெய்னா கேப்டனாக இருக்கும் போட்டி என்பதால் ஒரு கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ரசிகர்கள் எரிச்சல்

ரசிகர்கள் எரிச்சல்

ஆனால், "வந்தோமா, போனோமா" என 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சென்ற ரெய்னாவை பார்த்து ரசிகர்கள் எரிச்சலாகி உள்ளனர். இந்த சீசனில் இது வரை ஒரு அரைசதம் அடித்துள்ளார் ரெய்னா. மூன்று முறை 30+ ரன்களை எட்டியுள்ளார்.

மோசமான சராசரி

மோசமான சராசரி

அப்படி இருந்தும் அவரது பேட்டிங் சராசரி 25 ரன்களைக் கூட தாண்டவில்லை. பல போட்டிகளில் 20 ரன்களைக் கூட அவர் தாண்டவில்லை என்பதே இந்த மோசமான சராசரிக்கு காரணம்.

அவரா இவர்?

அவரா இவர்?

சுரேஷ் ரெய்னாவின் இந்த மோசமான பேட்டிங்கை பார்த்து, "25 பந்துகளில் 87 ரன்கள் அடித்த ரெய்னாவா இது?" என புலம்பி வருகிறார்கள். சிலர் சுரேஷ் ரெய்னாவை தூக்கி விட்டு வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் எனவும் கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.

Story first published: Saturday, April 27, 2019, 15:05 [IST]
Other articles published on Apr 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+