For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பல முடிவுகளில் சொதப்பினார். ரோஹித் சர்மா, கேப்டன்சியில் வழக்கம் போல அசத்தி அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினார். மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம், பண்டியா சகோதரர்கள் தான். எப்படி என பார்ப்போம்.

மும்பை பேட்டிங் எப்படி?

மும்பை பேட்டிங் எப்படி?

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது மும்பை அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் 30, டி காக் 35 ரன்கள் சேர்த்தனர். பென் கட்டிங் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். சூர்யகுமார் 26 ரன்கள் சேர்த்தார். அதன் பின் பண்டியா சகோதரர்கள் ஹர்திக் - க்ருனால் ஜோடி சேர்ந்தனர்.

அதிரடி பண்டியா’ஸ்

அதிரடி பண்டியா’ஸ்

17 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 118 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்தது. அடுத்த மூன்று ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்தனர் பண்டியா சகோதரர்கள். மும்பை அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. இந்த மூன்று ஓவர்கள் தான் போட்டியை மாற்றியது.

கோட்டை விட்ட கேப்டன்

கோட்டை விட்ட கேப்டன்

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் பெரிதும் கோட்டை விட்டார். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அப்படி இருந்தும் சிறப்பாக பந்துவீசிய அமித் மிஸ்ராவிற்கு மூன்று ஓவர்கள் மட்டுமே கொடுத்தார்.

வினை

வினை

அதே போல, குறைந்த ரன்களே கொடுத்திருந்த இஷாந்த் சர்மாவிற்கும் மூன்று ஓவர்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயம், ரன்களை வாரி இறைத்திருந்த கிறிஸ் மோரிஸ், கீமோ பாலுக்கு கடைசி நேரத்தில் ஓவர் கொடுத்தார். அதுதான் வினையாக முடிந்தது.

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

ரன் குவிக்க சிரமமாக இருக்கும், சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் மும்பை 168 ரன்கள் எடுத்த போதே அந்த அணியின் வெற்றி உறுதியாகி விட்டது. டெல்லி அணி சேஸிங்கில் எதிர்பார்த்தது போல சொதப்பியது.

டெல்லி தோல்வி

டெல்லி தோல்வி

அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 128 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி. அதிகபட்சமாக தவான் 30, அக்சர் பட்டேல் 26, ப்ரித்வி ஷா 20 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சாஹர் 3 விக்கெட்கள் சாய்த்தார்.

Story first published: Friday, April 19, 2019, 0:06 [IST]
Other articles published on Apr 19, 2019
English summary
IPL 2019 DC vs MI : Mumbai Indians beat Delhi Capitals by 40 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+