Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கேப்டன்.. இப்படி பண்ணிட்டீங்க.. அவங்க 2 பேருக்கும் 4 ஓவர் கொடுத்துருக்கலாமே!

டெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மோசமாக தோல்வி அடைந்தது.

அதற்கு முக்கிய காரணம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தவறு தான் என இந்தப் போட்டியில் டெல்லி தோற்க காரணம் என ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

1
45910
கேப்டனின் சொதப்பல்

கேப்டனின் சொதப்பல்

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 17 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அடுத்த மூன்று ஓவர்களில் பண்டியா சகோதரர்கள் சந்தித்த நிலையில், கட்டுகோப்பாக பந்து வீசியவர்களை விட்டு விட்டு, ரன்களை வாரி இறைத்த கீமோ பால், கிறிஸ் மோரிஸ் கைகளில் பந்தை கொடுத்தார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

அதன் விளைவு, கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் மும்பை அணி 50 ரன்கள் சேர்த்தது. 150 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலையில் இருந்த மும்பை, 168 ரன்கள் எடுத்தது. பண்டியா சகோதரர்கள் வெளுத்துக் கட்டினர்.

ஓவர் வாய்ப்பு

ஓவர் வாய்ப்பு

டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இஷாந்த் சர்மா 3 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்திருந்தார். இவர்கள் இருவரும் குறைவாக ரன்கள் கொடுத்திருந்தும், இவர்களுக்கு நான்கு ஓவர்களும் பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை ஸ்ரேயாஸ் ஐயர்.

பின்னடைவு

பின்னடைவு

சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த ஆடுகளத்தில், அமித் மிஸ்ராவை முழுமையாக பயன்படுத்தாததும் டெல்லி அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் பல குழப்பங்களை செய்து வருகிறார். அதை ரசிகர்களே சுட்டிக் காட்டும் நிலை உள்ளது.

Story first published: Friday, April 19, 2019, 10:49 [IST]
Other articles published on Apr 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+