Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை நம்பி ஓடி வந்தேனே.. என்னை சொல்லணும்.. நொந்து போன டி காக்!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் 34வது போட்டியிழ்க் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

1
45910

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் க்வின்டன் டி காக் ஆட்டமிழந்த விதம் பரிதாபமாக அமைந்தது. சக வீரர் சூர்யகுமார் யாதவ்-ஆல் தன் விக்கெட்டை பறி கொடுத்தார்.

துவக்கம்

துவக்கம்

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு டி காக் அருமையான துவக்கம் அளித்தார். 10வது ஓவரில் 27 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தை சூர்யகுமார் சந்தித்தார். அக்சர் பட்டேல் பந்து வீசினார்.

ரன் ஓடுவதில் குழப்பம்

ரன் ஓடுவதில் குழப்பம்

அந்த பந்தை சூர்யகுமார் பேக்வேர்டு திசையில் தட்டி விட்டு ஓடலாம் என ஒரீரு அடிகள் எடுத்து வைத்தார். அதே நேரம், முழு வேகத்தில் ஓடி வந்தார் டி காக். பந்தை டெல்லி வீரர் ரபாடா பிடித்து விட்டதை பார்த்த சூர்யகுமார் ரன் ஓடாமல் திரும்பினார்.

ஒரே கிரீஸில்..

ஒரே கிரீஸில்..

ஆனால், பந்தை ரபாடா விக்கெட் கீப்பரிடம் எறிவதற்குள், டி காக் எதிர் முனையை அடைந்து விட்டார். சூர்யகுமார் யாதவ் பின்வாங்காமல் ரன் ஓடி இருந்தால் அந்த ரன்னை ஓடி இருக்கலாம். ஆனால், அவர் பின்வாங்கியதால், ஒரே நேரத்தில் இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒரே கிரீஸில் நின்று இருந்தனர்.

ரன் அவுட்

ரன் அவுட்

பந்தை வாங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அக்சர் பட்டேலிடம் பந்தை எறிய, டி காக் ரன் அவுட் செய்யப்பட்டார். ஓடுவது போல வந்து பின்னர் பின்வாங்கி டி காக்கை ஏமாற்றிய சூர்யகுமார் தன் விக்கெட்டை தற்காத்துக் கொண்டார்.

டி காக் ஏமாற்றம்

டி காக் ஏமாற்றம்

டி காக் இந்த ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருக்கிறார் போட்டிக்கு போட்டி ரன் குவித்து அசத்தி வருகிறார். ஆனால், இந்தப் போட்டியில் சூர்யகுமார் செய்த தவறால் ஆட்டமிழந்த டி காக், ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டே திரும்பினார்.

Story first published: Thursday, April 18, 2019, 23:00 [IST]
Other articles published on Apr 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+