Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா? நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

சென்னை : வழக்கம் போல 2019 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன் தலைமைப் பண்பால், அனுபவத்தால் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார் தோனி.

ஆனால், தோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒரு செய்தி வலம் வருகிறது. அதனால், அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி ஆடுவாரா? மாட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

நல்ல செய்தி

நல்ல செய்தி

தோனி இல்லையென்றால் சிஎஸ்கே என்ன நிலைமைக்கு செல்லும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

பேட்டியில் தகவல்

பேட்டியில் தகவல்

அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு ஐபிஎல்-இல் சிஎஸ்கே அணியில் தோனி இடம் பெறுவாரா என்பது குறித்து பேசுகையில், "தோனி நிச்சயம் திரும்பி வருவார்" என கூறியுள்ளார்.

நிச்சயம் வருவார்

நிச்சயம் வருவார்

"அவர் நிச்சயம் திரும்பி வருவார் என உறுதியாக இருக்கிறோம். கடந்த இரு ஆண்டுகளில் தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை என்ற பேச்சு இருந்தது. ஆனால், புள்ளிவிவரப்படி தோனி இரண்டு சிறந்த ஆண்டுகளை பெற்றார். கடந்த சீசனிலும் தோனி சிறப்பாக ஆடினார். இந்த முறை அதை விட சிறப்பாக ஆடினார். அவரை பற்றி தெரியும், இந்தியாவுக்காக உலகக்கோப்பையிலும் இதே போல ஆடுவார். அவர் நிச்சயம் திரும்பி வருவார்" என்று கூறினார்.

தோனி பதிலால் குழப்பம்

தோனி பதிலால் குழப்பம்

2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் முடிவில் தோனியிடம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பீர்களா? என கேட்ட போது, "ஆம்.. நம்புகிறேன்" என கூறினார். அது ரசிகர்களுக்கு குழப்பத்தை அளித்தது. தோனி சந்தேகத்துடன்தான் திரும்ப ஆடுவது பற்றி கூறியதாக அவர்கள் எண்ணினர்.

சிஎஸ்கே நெருக்கம்

சிஎஸ்கே நெருக்கம்

இந்த நிலையில், தோனி, சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் மிக நெருக்கமாக இருப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சிஎஸ்கே அணிக்கு கேப்டன் என்பதை தாண்டியும், அவருக்கு அங்கே நட்பு வட்டம் உண்டு.

உற்சாகம்

உற்சாகம்

எனவே, சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து "தோனி நிச்சயம் திரும்ப வருவார்" என்ற செய்தி வந்துள்ளது தோனி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. இது மட்டுமின்றி, இதை உறுதிப்படுத்த மற்றொரு செய்தியும் உள்ளது.

பிளெம்மிங் அளித்த தகவல்

பிளெம்மிங் அளித்த தகவல்

ஏற்கனவே, சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், தோனி உலகக்கோப்பை முடித்து வந்தவுடன் சிஎஸ்கே அணியை புது அணியாக, இளமை + அனுபவம் கலந்த அணியாக மாற்ற உள்ளதாக கூறி இருந்தார். அதை வைத்தும் பார்க்கும் போது, தோனி சிஎஸ்கே அணியை விட்டு எங்கேயும் போகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இனிமே வயசான டீம் இல்லை.. அடுத்த ஐபிஎல்ல புதுசா வர்றோம்.. தோனிக்காக தான் வெயிட்டிங்.. சிஎஸ்கே தடாலடி!

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தோனி அடுத்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளார். அதன் பின், ஒருவேளை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் அவரைப் பார்த்து ஆறுதல் அடையலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Story first published: Friday, May 17, 2019, 11:27 [IST]
Other articles published on May 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+