Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முரளி விஜய் டீம்ல இருந்தாத்தான் சரியா வரும்.. தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்?

Recommended Video

IPL 2019 finals: Chennai vs Mumbai | முரளி விஜய் சேர்ப்பு ! தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்?

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டியில் சென்னை அணியில் ஒரு முக்கிய மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

டெல்லி அணிக்கு எதிரான இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் பேட்ஸ்மேன் முரளி விஜய்க்கு பதிலாக, பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குரை அணியில் சேர்த்தார் தோனி.

வாய்ப்பு வழங்கவில்லை

வாய்ப்பு வழங்கவில்லை

அந்தப் போட்டியில் சென்னை அணி எளிதாக வெற்றி பெற்றாலும், ஷர்துல் தாக்குர் தான் வீசிய முதல் ஓவரில் 13 ரன்கள் கொடுத்ததை அடுத்து, அவருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை தோனி.

தாக்குர் இல்லாமல்..

தாக்குர் இல்லாமல்..

மொத்தத்தில் ஷர்துல் தாக்குர் பங்களிப்பு அணியில் இல்லை. அவரது மீத ஓவர்கள் இல்லாமலேயே பிராவோ, தீபக் சாஹர் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் 20 ஓவர்களை வீசி முடித்தது சென்னை.

பலம் சேர்க்கும்

பலம் சேர்க்கும்

இந்த நிலையில், முக்கியமான இறுதிப் போட்டியில் ஆறாவது பந்துவீச்சாளராக தாக்குரை தேர்வு செய்வதை விட, கூடுதல் பேட்ஸ்மேனாக முரளி விஜய்யை அணியில் சேர்ப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என கூறப்படுகிறது.

கருத்து

கருத்து

முரளி விஜய் இந்த சீசனில் தனக்கு கிடைத்த இரண்டு பேட்டிங் வாய்ப்புகளிலும் ஓரளவு ரன் குவித்துள்ளார். பேட்டிங்கில் பெரியளவில் தடுமாற்றம் இல்லை. எனவே, இவரை அணியில் சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

தோனி முடிவு என்ன?

தோனி முடிவு என்ன?

ஆனால், தோனி முரளி விஜய்யை அணியில் சேர்த்துக் கொள்வாரா? அல்லது இரண்டாம் தகுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற அடிப்படையில், ஷர்துல் தாக்குரை அணியில் வைத்துக் கொள்வாரா?

Story first published: Sunday, May 12, 2019, 12:29 [IST]
Other articles published on May 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+