Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம் இதுதான்.. கௌதம் கம்பீர் எதை சொல்றாரு தெரியுமா?

டெல்லி : 2019 ஐபிஎல் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் குறித்து முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது, மும்பை, சென்னை அணிகளின் வெற்றிப் பயணத்துக்கு என்ன காரணம் என்பதை விளக்கிக் கூறினார்.

IPL 2019 : Gautam Gambhir says how Mumbai Indians and Chennai Super Kings are good

ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சென்ற நான்கு அணிகளுமே கோப்பை வெல்லும் தகுதி உடைய அணிகள் தான். ஆனால், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அழுத்தத்தை சமாளிக்கும் திறன் பெற்ற அணிகள் என்பதால் அதிக தகுதி கொண்ட அணிகளாக இருந்தன என்றார் கம்பீர்.

மேலும், அந்த இரு அணிகளும் ஒரு திட்டத்தை வைத்திருந்தன. வெற்றியோ, தோல்வியோ அணியை அதிகம் மாற்றுவதில்லை. சென்னை அணியில் அம்பதி ராயுடு தொடர்ந்து சரியாக ஆடாத போதும், அவரை அணியில் வைத்திருந்தார்கள். ஷேன் வாட்சனுக்கும் வாய்ப்பு அளித்துக் கொண்டே இருந்தார்கள். மும்பை அணியும் அதே போல இஷான் கிஷனை நம்பியது என குறிப்பிட்டார் கம்பீர்.

இது போல, இந்த இரண்டு அணிகளும் தங்கள் வீரர்களை நம்பி, பாதியிலேயே அவர்களை நீக்காமல் இருந்ததால் தான் மற்ற அணிகளைக் காட்டிலும் இந்த இரண்டு அணிகளும் இறுதி வரை முன்னேறியது என்கிறார் கம்பீர்.

Story first published: Wednesday, May 15, 2019, 16:31 [IST]
Other articles published on May 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+