நாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்!!
Recommended Video
மும்பை : 2019 ஐபிஎல் தொடர் ஒரு வழியாக முடிந்துள்ளது. இருந்தாலும் கம்பீர் விராட் கோலியை விமர்சிப்பதை நிறுத்தவில்லை.
ஐபிஎல் தொடர் துவங்கும் முன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியை காய்ச்சி எடுத்து, கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இப்போது தொடர் முடிந்த பின்னும் அதே போன்ற விமர்சனத்தை முன் வைத்துள்ள கம்பீர், இன்னும் ஒரு படி மேலே போய், கோலிக்கு அடுத்த கேப்டனையும் அடையாளம் காட்டியுள்ளார்.

அடுத்த திட்டம்
அனேகமாக, உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி படு தோல்வி அடைந்தால், அரையிறுதிக்கு முன்னேறாவிட்டால், கேப்டனை மாற்றுமாறு கம்பீர் வலியுறுத்தவும் வாய்ப்புள்ளது. கம்பீர் வைத்த விமர்சனம் என்ன? அடுத்த கேப்டன் யார்?

ஐபிஎல்-இல் கோலி
ஐபிஎல் தொடரில் கடந்த 2017 முதல் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. லீக் சுற்றிலும் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 2013 முதல் அந்த அணிக்கு கேப்டனாக இருக்கும் கோலி, இதுவரை ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.

ஒப்பிடக் கூடாது
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் நான்கு முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மூன்று முறை கோப்பை வென்றுள்ள சென்னை அணியின் கேப்டன் தோனியுடன், கோலியை ஒப்பிடக் கூடாது. இவர் இன்னும் கோப்பை வெல்லவில்லை என நேரடியாக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் கம்பீர்.

நாட்டுக்கே தெரியும்
மேலும், ரோஹித் இப்போது கேப்டன்சியில் உச்சத்தில் இருக்கிறார். இந்த நாட்டுக்கே அது தெரியும் என நினைக்கிறேன். காரணம், அவர் நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்-இல் அவர் தான் வெற்றிகரமான கேப்டன்.

அடுத்த கேப்டன் இவர்தான்
ஆசிய கோப்பைக்கு கேப்டனாக இருந்து வென்று கொடுத்துள்ளார் ரோஹித். எனவே, அவர் ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, விராட் கோலிக்கு அடுத்த கேப்டன் அவர் தான் என்றார் கம்பீர். ஆக, ஐபிஎல் தொடருக்கு முன் கோலியை வாரிய கம்பீர், அதில் வெற்றி கண்டார். இப்போது உலகக்கோப்பைக்கு முன் காலை வாருகிறார்.

கேப்டன் ரோஹித்?
உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெறாவிட்டால், இந்திய அணி கேப்டனை மாற்றுங்கள் என முதல் ஆளாக கம்பீர் கோஷம் போட்டு எதிர்ப்பை துவங்கி வைப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆமா.. ரோஹித் கேப்டனா இருந்தா நல்லாத் தானே இருக்கும்.. என்ன சொல்றீங்க மக்களே?


Click it and Unblock the Notifications