எந்த கேப்டனும் இப்படி செய்ய மாட்டாங்க.. ஆனா தோனி செய்கிறார்.. புட்டு புட்டு வைத்த ஸ்ரீகாந்த்!!
Recommended Video

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்று கலக்கி வருகிறது.
பல முக்கிய வீரர்களை இழந்து, பலவீனமான அணியாக இருந்தாலும், சென்னை அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. பலவீனத்தையே பலமாக மாற்றி உள்ளது. அது குறித்து ஸ்ரீகாந்த் பேசினார். குறிப்பாக தோனி புகழ் பாடினார் என்றே சொல்லலாம். அவர் பேசியதன் சாராம்சம் இங்கே -

முக்கிய காரணம் தோனி
சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அற்புதமான தலைமை. தோனி எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக வைத்துக் கொள்கிறார். தோனிக்கு அவரது பலம் என்னவென்று தெரியும். அவர் என்ன நடந்தாலும் திட்டத்தின்படி செயல்படுவார். குழப்பமடையாத மனது தான் தோனியின் வெற்றிக்கு காரணம் என்றார் ஸ்ரீகாந்த்.

வேகப்பந்துவீச்சில் தடுமாற்றம்
சென்னை அணியை பொறுத்தவரை கடந்த ஆண்டை காட்டிலும், இந்த முறை முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆடி வருகிறது. குறிப்பாக வேகப்பந்துவீச்சில் சென்னை அணியின் திட்டங்கள் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.
அது எப்படிங்க.. தோனி செஞ்ச காரியத்துக்கு வெறும் 50% தான் அபராதமா? பின்னாடி என்ன நடந்துச்சு?

முக்கிய வீரர்கள் இல்லை
லுங்கி நிகிடி, டேவிட் வில்லி போன்ற வீரர்கள் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்கள். பிராவோ காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழலில் இருக்கிறார். ராஜஸ்தான் போட்டிக்கு முன் ஏற்பட்ட கழுத்து வலி காரணமாக ஹர்பஜன் சிங் ஒரீரு போட்டிகளில் ஆடமுடியாத நிலை உள்ளது.

முழு காரணம்
இப்படி முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், தோனி கையில் இருக்கும் வீரர்களை வைத்து சமாளித்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிகளை குவித்து வருகிறார். இதற்கு முழு காரணம் தோனி தான் என்கிறார் ஸ்ரீகாந்த்.

ஹர்பஜன் சிங் சுழற்சி
மேலும், ஹர்பஜன் சிங்கை தோனி எப்படி பயன்படுத்தி வருகிறார் என்பது குறித்து குறிப்பிட்டு பேசினார் ஸ்ரீகாந்த். எந்த கேப்டனும் தன் முந்தைய போட்டியில் ஆட்டநாயகனை அடுத்த போட்டியில் நீக்க மாட்டார். ஆனால், தோனி தொடர்ந்து ஆட்டநாயகன் விருது வென்று வரும் ஹர்பஜன் சிங்கை குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறார் என்றார்.


Click it and Unblock the Notifications