Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடங்கப்பா.. போட்டிக்குப் பின்.. மனைவிக்கு கிலோ கணக்கில் ஐஸ் வைத்த ஆண்ட்ரே ரஸ்ஸல்!!

கொல்கத்தா : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

அவரது பிறந்த நாளன்று நடந்த இந்தப் போட்டியில், ரஸ்ஸல் 40 பந்துகளில் 80 ரன்கள் குவித்ததோடு, 2 விக்கெட்களும் கைப்பற்றி அசத்தினார்.

மனைவியுடன் பேட்டி

மனைவியுடன் பேட்டி

போட்டிக்கு பின் ரஸ்ஸல் மற்றும் அவரது மனைவி இருவரும் லைவ்வாக தொலைக்காட்சியில் பேசினர். ரஸ்ஸல் எப்படி போட்டிக்குப் போட்டி அதிரடியாக ஆடுகிறார் என்பது குறித்து பேசினர்.

அழகான மனைவி

அழகான மனைவி

ரஸ்ஸல், "இது சிறப்பான இரவு. என் பிறந்த நாள். எனக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், என் "அழகான மனைவி"யை ஈர்க்க வேண்டும் என்ற அழுத்தம் போட்டிக்கு போட்டி இருக்கும்" எனக் கூறி அருகில் இருந்த மனைவிக்கு மொத்தமாக ஐஸ் வைத்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அடுத்து பேசிய ரஸ்ஸலின் மனைவி ஜாசிம், "எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் இன்று இப்படி ஆடுவீர்கள் என தெரியும்.. ஏன் என்றால் இந்த மைதானத்தில் (கொல்கத்தா ஈடன் கார்டன்) நடக்கும் (இந்த சீசனின்) கடைசி ஐபிஎல் போட்டி இதுதான்" என குறிப்பிட்டார்.

50 சிக்ஸர்

50 சிக்ஸர்

ரஸ்ஸல் இந்தப் போட்டியில் எட்டு சிக்ஸர் அடித்தார். அதன் மூலம், இந்த சீசனில் 50 சிக்ஸர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும் 10 சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் கிறிஸ் கெயிலின் ஒரே ஐபிஎல் தொடரில் 59 சிக்ஸர்கள் சாதனையை முறியடிப்பார்.

அதிக ஸ்ட்ரைக் ரேட்

அதிக ஸ்ட்ரைக் ரேட்

ஆண்ட்ரே ரஸ்ஸல் இந்த தொடரில் இதுவரை 486 ரன்கள் குவித்துள்ளார் அவரது ஸ்ட்ரைக் ரேட் 207 ஆகும். இத்தனை அதிக ஸ்ட்ரைக் ரேட்டில், இவ்வளவு ரன்கள் குவித்த வீரர் ஐபிஎல்-இல் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

Story first published: Monday, April 29, 2019, 14:10 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+