Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம அதிரடி.. சிக்ஸ் மழை.. இதான்பா உண்மையான டி20.. மிரட்டிய ரஸ்ஸல்.. கதிகலங்க வைத்த ஹர்திக் பண்டியா!

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற்ற போட்டி 200 ரன்களை தாண்டி ரன் குவிக்கப்பட்ட போட்டிகளில் சிறந்த போட்டியாக அமைந்தது.

பல 140, 160 ரன்கள் குவிக்கப்பட்ட டி20 போட்டிகளை பார்த்து சோர்ந்து போனவர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்தப் போட்டி. கொல்கத்தா அணியில் பேட்டிங் செய்த அனைவரும் 160க்கு மேல் தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. என்ன மாதிரி போட்டி என்று!

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

இந்தப் போட்டிக்கு முன் இருந்த சூழ்நிலைப்படி கொல்கத்தா இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோய் விடும் எனவே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது அந்த அணி. மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில், கிறிஸ் லின் அதிரடி துவக்கம் அளித்தனர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பவுண்டரி அடித்தனர். கிறிஸ் லின் 29 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

3வது வரிசையில் ரஸ்ஸல்

3வது வரிசையில் ரஸ்ஸல்

ஷுப்மன் கில் 45 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து ஆச்சரியம் அளித்தார். அவருக்கு பேட்டிங் ஸ்ட்ரைக் கொடுக்கும் வேலையை செய்ய கேப்டன் தினேஷ் கார்த்திக் நான்காவது பேட்ஸ்மேனாக வந்து சேர்ந்தார்.

வெளுத்த ரஸ்ஸல்

வெளுத்த ரஸ்ஸல்

துவக்க வீரர்கள் காட்டிய அதிரடி ஒரு ரகம் என்றால், ரஸ்ஸலின் அதிரடி வேறு ரகமாக இருந்தது. துவக்கத்தில் நிதானம் காட்டிய அவர், பின்னர் வெளுக்க ஆரம்பித்தார். 40 பந்துகளில் 80 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டத்தில் எட்டு சிக்ஸர் அடங்கும்.

15 சிக்ஸர்கள்

15 சிக்ஸர்கள்

20 ஓவர்களில் கொல்கத்தா 232 ரன்கள் குவித்தது. மொத்தமாக கொல்கத்தா அணி 15 சிக்ஸர்கள் அடித்து இருந்தது. அடுத்து இமாலய இலக்கை துரத்த வந்தது மும்பை. அந்த அணியின் துவக்க வீரர் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

அடுத்து ரோஹித் 12, ஈவான் லீவிஸ் 15, சூர்யகுமார் 26, பொல்லார்டு 20 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். சரி, 5 விக்கெட் போச்சு.. எப்படியும் மும்பை தோற்று விடும் என எண்ணிய போது, ஹர்திக் பண்டியா "காட்டு காட்டென" காட்டினார்.

ஹர்திக் பண்டியா அரைசதம்

ஹர்திக் பண்டியா அரைசதம்

அவரது ஆட்டம் ரஸ்ஸல் அதிரடியை எல்லாம் தூக்கி சாப்பிட்டது. அவருக்கு சகோதரர் க்ருனால் பண்டியா துணை நிற்க, 17 பந்துகளில் அரைசதம் கடந்து வாயை பிளக்க வைத்தார். ஒரு கட்டத்தில் 3 ஓவர்களில் 59 ரன்கள் என்ற நிலைக்கு எடுத்து வந்து விட்டார்.

கதிகலங்கிய கொல்கத்தா

கதிகலங்கிய கொல்கத்தா

இதனால், கொல்கத்தா அணி கதிகலங்கிப் போனது. 18வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் ஆட்டமிழந்த பின் தான் கொல்கத்தா ஆசுவாசம் அடைந்தது. ஹர்திக் பண்டியா 34 பந்துகளில் 91 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் 9 சிக்ஸர்கள் அடங்கும்.

தோல்வி

தோல்வி

அதன் பின் 2 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை தோல்வி உறுதியானது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரஸ்ஸல் அபாரம்

ரஸ்ஸல் அபாரம்

ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கலக்கினார். 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் சாய்த்தார் அவர். ஹர்திக் பண்டியா ரஸ்ஸலை விட அதிரடியாக ஆடியும், மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியது மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Monday, April 29, 2019, 0:54 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+