ரஹானேவுக்கு கேப்டன்கிற மரியாதையே கொடுக்கலை.. என்ன நடந்தது? புட்டு புட்டு வைத்த ஆஸி. வீரர்!
Recommended Video
கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே கேப்டன் பதவியை இழந்தார்.
அதற்கு காரணம், இந்த சீசனில் அவர் தலைமையில் ஆடிய எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே ராஜஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.

பிராட் ஹாக் விமர்சனம்
அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்த முடிவு பற்றி யாரும் இதுவரை பெரிதாக விமர்சிக்காத நிலையில், ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.

நியாயம் கேட்ட பிராட் ஹாக்
தன் நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதை, வரவேற்காமல் எதிர்த்துள்ளார் பிராட் ஹாக். அதற்கு அவர் சொல்லும் காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக பலரும் கவனிக்க மறந்த ஒன்றை சுட்டிக் காட்டி ரஹானேவுக்காக நியாயம் கேட்டுள்ளார் பிராட் ஹாக்.

சரியில்லை
ரஹானே கேப்டனாக இருந்த போது மற்ற வீரர்கள் பலரும் தாங்களாகவே முடிவெடுத்து பீல்டிங் மாற்றினர், பிற வீரர்களுக்கு கட்டளை இட்டனர். ரஹானே பந்துவீச்சாளர்களிடம் பேசும் போது, மற்ற வீரர்கள் அவர் அருகே வந்து நின்றனர். மற்ற வீரர்கள் கேப்டனிடம் இப்படி நடந்து கொண்டது சரியில்லை என்கிறார் பிராட் ஹாக்.

அவமரியாதை
ஒரு கேப்டன் என்றால் அவர் கேப்டன் தான். அவர் தான் முடிவெடுப்பார். வேறு யாருமல்ல. ரஹானேவை நீக்கும் முடிவு கடினமானது. அவர்கள் அவருக்கு சற்றே அவமரியாதை செய்து விட்டனர் என ராஜஸ்தான் அணியினர் ரஹானேவை சுதந்திரமாக செயல்படவில்லை என சுட்டிக் காட்டியுள்ளார் பிராட் ஹாக்.

அவரா இருக்குமோ?
ஆமாம்.. ரஹானே கேப்டனாக இருந்த போது.. அவரை சுதந்திரமாக செயல்பட விடாத வீரர்கள் (வீரர்) யார்? ஒருவேளை அவரா இருக்குமோ? எது எப்படியோ.. ரஹானே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.


Click it and Unblock the Notifications