சின்னப்புள்ள மாதிரி தப்பு செய்த ராகுல்.. கூலிங் கிளாஸ் வழியே நெருப்பை கக்கிய கேப்டன் அஸ்வின்!
Recommended Video
சண்டிகர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் ராகுல், அடிப்படையான விஷயத்தில் பீல்டிங் தவறு செய்து, பந்தை கோட்டை விட்டார்.
இந்தப் போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்து வந்தது. அப்போது, 11வது ஓவரில் முருகன் அஸ்வின் பந்துவீசி வந்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை டு ப்லேசிஸ் எதிர்கொண்டார்.

ராகுல் தடுமாற்றம்
அந்த பந்தை பவுண்டரி அருகே இருந்த ராகுல் பக்கம் தட்டி விட்டு ஒரு ரன் ஓடினார் டு ப்லேசிஸ். பந்தை நோக்கி வந்த ராகுல், பந்தை பார்க்காமல், தடுமாறி பந்தை கோட்டை விட்டார்.

நெருப்புக் கனல்
பந்து பவுண்டரியை எட்ட, பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், ராகுலை ஒரு பார்வை பார்த்தார். அஸ்வினின், கூலிங் கிளாஸை தாண்டியும், அந்த பார்வையில், நெருப்பு கனலாக பறந்தது.

அடிப்படை பீல்டிங் தவறு
கிரிக்கெட் விமர்சகர்கள் இது குறித்து கூறுகையில், ராகுல் அடிப்படை பீல்டிங் விஷயத்திலேயே தவறு செய்து, பந்தை பவுண்டரிக்கு விட்டுவிட்டார். அதுதான் அஸ்வினின் கோபத்திற்கு காரணம் என கூறினர்.

பேட்டிங்கில் கலக்கல்
பீல்டிங்கில் தவறு செய்த ராகுல், பின்னர் பேட்டிங்கில் வெளுத்துக் கட்டினார். 36 பந்துகளில் 71 ரன்கள் குவித்த ராகுல், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.


Click it and Unblock the Notifications