Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரம்பமே சரியில்லை.. சிஎஸ்கே-வுக்கு பின்னடைவு.. இது கூட மும்பைக்கு சாதகமாத்தான் இருக்கு!!

Recommended Video

IPL 2019 Finals: Chennai vs Mumbai | சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை பேட்டிங்

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணி முக்கியமான போட்டியில் டாஸ் தோற்றது பின்னடைவு என்றே தெரிகிறது.

IPL 2019 MI vs CSK : Chennai Super Kings lose the toss in IPL 2019 final

இறுதிப் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் குறித்தும், டாஸ் வெற்றி எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இதோ -

IPL 2019 MI vs CSK : Chennai Super Kings lose the toss in IPL 2019 final

2019 ஐபிஎல் இறுதிப் போட்டியுடன் சேர்த்து ஐந்து முறை ஐபிஎல் இறுதிக்கு முன்னேறிய மும்பை அணி, அதில் மூன்று முறை டாஸ் வென்றுள்ளது. அந்த மூன்று முறையும் மும்பை அணி பேட்டிங் தான் தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர மும்பை - சென்னை மோதிய மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் தான் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

மேலும், கடந்த ஆறு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் தான் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றுள்ளன. இதை வைத்துப் பார்த்தால் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு டாஸ் பின்னடைவாக அமைந்துள்ளது.

Story first published: Sunday, May 12, 2019, 20:04 [IST]
Other articles published on May 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+