Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம பினிஷிங் தல! தினேஷ் கார்த்திக் ரெக்கார்டை காலி செய்த தோனி.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

Recommended Video

IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | தினேஷ் கார்த்திக் சாதனையை காலி செய்த தோனி

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.

அதைக் கண்ட தோனி + சென்னை ரசிகர்கள், "செம பினிஷிங் தல" என அவரை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்ற நிலையில், இறுதிப் போட்டியில் தோனி நிகழ்த்தி உள்ள சாதனை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்படி என்ன சாதனை?

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனை இந்த இறுதிப் போட்டிக்கு முன்பு வரை தினேஷ் கார்த்திக் வசம் இருந்தது. தோனி அதை தட்டிச் சென்றுள்ளார்.

தோனி பிடித்த கேட்ச்கள்

தோனி பிடித்த கேட்ச்கள்

இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா, டி காக் ஆகிய இரண்டு மும்பை வீரர்களின் கேட்ச்சை பிடித்த தோனி, 94 கேட்ச், 34 ஸ்டம்பிங்குகள் செய்து, ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 132 விக்கெட் வீழ்ச்சிகளுக்கு காரணமாக இருந்துள்ளார்.

தோனி முதல் இடம்

தோனி முதல் இடம்

தினேஷ் கார்த்திக் 131 விக்கெட் வீழ்ச்சிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிகள் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி (132) முதல் இடத்திலும், தினேஷ் கார்த்திக் (131) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

கடைசி ஐபிஎல் தொடர்

கடைசி ஐபிஎல் தொடர்

தோனிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்தான் கடைசி என சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சாதனை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு தோனி, ஆடாமல், தினேஷ் கார்த்திக் மட்டும் ஐபிஎல் தொடரில் ஆடும் பட்சத்தில் இந்த சாதனையை அவர் முறியடிப்பார்.

செம பினிஷிங்

செம பினிஷிங்

ஆனால், இறுதிப் போட்டியில் தோனி முதல் இடத்தை பிடித்துள்ளதால் சுமார் ஓராண்டு காலம் இந்த சாதனை தோனி வசமே இருக்கும். இதைத் தான் "செம பினிஷிங் தல" என தோனி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Sunday, May 12, 2019, 22:37 [IST]
Other articles published on May 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+