For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓடி ஓடி ஓடாய் தேய்ந்த இம்ரான் தாஹிர்.. பட்ட கஷ்டம் வீண் போகலை.. ஹர்பஜனை மிஞ்சிய சூப்பர் சாதனை!

Recommended Video

IPL 2019: ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதை பெற்ற இம்ரான் தாஹிர்- வீடியோ

ஹைதராபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 2019 ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சக நாட்டு வீரரான காகிசோ ரபாடாவை முந்தி, அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். மேலும், இதனிடையே, ஹர்பஜன் சிங்கின் சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார்.

ரபாடா 25 விக்கெட்கள்

ரபாடா 25 விக்கெட்கள்

2019 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் ரபாடா 25 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அவர் 12 போட்டிகளில் மட்டுமே ஆடிய நிலையில், காயம் காரணமாக தன் நாட்டுக்கு திரும்பினார். அவரது சாதனையை நெருங்கிய ஒரே வீரர் இம்ரான் தாஹிர்.

இரண்டு விக்கெட்கள்

இறுதிப் போட்டியில் இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட்கள் எடுக்கும் பட்சத்தில், அவரை முந்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரியலாம் என்ற வாய்ப்பு இருந்தது. அதே போல, இறுதிப் போட்டியில் சூர்யகுமார், இஷான் கிஷன் விக்கெட்களை வீழ்த்திய இம்ரான் தாஹிர் இந்த தொடரில் 17 போட்டிகளில் ஆடி, 26 விக்கெட்கள் என்ற எண்ணிக்கையை தொட்டார்.

ஹர்பஜன் சிங் பின்னே!

ஹர்பஜன் சிங் பின்னே!

இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் என்ற சாதனையோடு, சுழற் பந்துவீச்சாளர்களில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சுனில் நரைன், ஹர்பஜன் சிங் ஆகியோரை முந்தி முதல் இடம் பிடித்தார் இம்ரான் தாஹிர்.

விக்கெட் ஓட்டம்

விக்கெட் ஓட்டம்

இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்த பின் அதைக் கொண்டாடும் விதம் தனித்துவமானது, விக்கெட் எடுத்த உடன் கையை உயர்த்திக் கொண்டு அவர் வேகமாக மைதானத்தை வலம் வரும் காட்சியை காணவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி விக்கெட் எடுத்து ஓடி, ஓடி ஓடாய் தேய்ந்த இம்ரான் தாஹிர், சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.

Story first published: Sunday, May 12, 2019, 23:24 [IST]
Other articles published on May 12, 2019
English summary
IPL 2019 MI vs CSK : Imran Tahir took most wickets in IPL 2019
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+