Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது வைடு கிடையாதா?.. பேட்டை தூக்கிப் போட்டு அம்பயருக்கு மிரட்டல்.. அட்டகாசம் செய்த பொல்லார்டு!!

Recommended Video

IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | போட்டி நடுவரிடம் அட்டகாசம் செய்த பொல்லார்டு!!

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் அம்பயருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை கூட்டினார் மும்பை வீரர் கீரான் பொல்லார்டு.

1
45949

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 19 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே குவித்து தடுமாறி வந்தது.

பவுண்டரி முயற்சி

பவுண்டரி முயற்சி

அப்போது கடைசி ஓவரில் ரன் அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பொல்லார்டு. அப்போது சென்னை அணியின் பிராவோ பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளை சந்தித்த பொல்லார்டு அதில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தார்.

தள்ளி வீசிய பிராவோ

தள்ளி வீசிய பிராவோ

மூன்றாவது பந்தை சற்றே தள்ளி வீசினார் பிராவோ. பந்து வைடு ஆக சென்றது. பொல்லார்டு வைடு என்பதால் பந்தை அடிக்கவில்லை. ஆனால், அம்பயர் அந்த பந்திற்கு வைடு கொடுக்கவில்லை.

வைடு இல்லையா?

வைடு இல்லையா?

அந்த பந்து வைடு என்பது போட்டியை பார்த்த அனைவர்க்கும் தெளிவாக தெரிந்தது. ஆனால், அம்பயர் ஏனோ சந்தேகத்துடன் வைடு இல்லை என மறுத்து விட்டார். இதனால், கோபமடைந்தார் பொல்லார்டு.

அம்பயருக்கு மிரட்டல்

பேட்டை மேலே தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தார். இது அம்பயருக்கு விடுத்த மிரட்டல் போலவே இருந்தது. அம்பயர் சற்றே பயந்து போய், பொல்லார்டை பார்த்தார். இதன் பின்னும் கோபம் அடங்காத பொல்லார்டு இன்னொரு காரியம் செய்தார்.

ஓசி விக்கெட்

ஓசி விக்கெட்

அடுத்த பந்தை பிராவோ வீசத் தயாரான போது, பொல்லார்டு வைடு குறிக்க போட்டிருக்கும் கோட்டை தாண்டி நின்று கொண்டார், "கிடைச்சது ஓசி விக்கெட்" என பிராவோ ஸ்டம்ப்பை குறி பார்த்து பந்து வீச ஓடி வந்தார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஆனால், பொல்லார்டு பிட்ச்சை விட்டே மொத்தமாக வெளியேறினார். இதனால், அம்பயர்கள் பந்தை தடுத்து, பொல்லார்டுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இறுதிப் போட்டி என்பதால் பொல்லார்டு பயங்கர கோபத்தை காட்டினார்.

அம்பயர்கள் தவறு

அம்பயர்கள் தவறு

அம்பயர்கள் இந்த தொடர் முழுவதும் பல சாதாரண விஷயங்களில் கூட தவறு செய்து வருகின்றனர். அது இறுதிப் போட்டியிலும் நடந்தேறி உள்ளது.

Story first published: Sunday, May 12, 2019, 23:05 [IST]
Other articles published on May 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+