பெருசா விக்கெட்டை தியாகம் பண்றாரு.. கடைசி ஓவரில் பொல்லார்டு-க்காக ரன் அவுட்.. கடுப்பான ரசிகர்கள்!!
ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி பரபரப்பாக கடைசி ஓவர் வரை நடைபெற்றது. மும்பை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த போது, 20வது ஓவரில் பிராவோ பந்துவீச்சில் ரன் குவிக்க திணறினார் கீரான் பொல்லார்டு. முதல் மூன்று பந்துகளில் ரன் எடுக்க முடியாத நிலையில், நான்காவது பந்தை தட்டி விட்டு ஒரு ரன் மட்டுமே ஓட முடியும் என்ற இடத்தில் இரண்டு ரன்கள் ஓடினார்.

காரணம், பொல்லார்டு மீண்டும் பேட்டிங் ஸ்ட்ரைக் பெற வேண்டும் என்பதற்க்காக! இரண்டாவது ரன் ஓடியதால் எதிர்முனை பேட்ஸ்மேன் மிட்செல் மெக்கிளினகன் பிராவோ-வால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
பொல்லார்டு இதன் பின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ஃபோர் மட்டுமே அடித்தார். பொல்லார்டு ரன் அடிக்க சிரமப்பட்ட நிலையில், "அவருக்காக, மிட்செல் பெருசா தியாகம் பண்றாரு" என மும்பை ரசிகர்கள் கடுப்பானார்கள்.


Click it and Unblock the Notifications