என்னப்பா.. ஃபைனல்ஸ்-ல இப்படி பண்ணிட்டீங்க.. பதறியடித்த பத்திரிக்கையாளர்கள்!
Recommended Video
ஹைதராபாத் : ஹைதராபாத் நகரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் இறுதிப் போட்டி பரபரப்பாக நடைபெற்றது.
இறுதிப் போட்டி என்பதால், பத்திரிகையாளர்கள் அனைவரும் மைதானத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட அறையில் அமர்ந்து போட்டி விவரம் மற்றும் செய்திகளை நேரலையில் அனுப்பி வந்தனர்.

முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் ஆடி வந்தது. அப்போது போட்டியின் எட்டாம் ஓவரில் பத்திரிக்கையாளர் அறையில் மின்தடை ஏற்பட்டது.
அதனால், அந்த அறையில் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் தங்கள் பவர் பேங்க் சார்ஜர்களை தேடிக் கொண்டிருந்தனர்.
மற்றொரு புறம் மின்தடையால், இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், தங்கள் மொபைல் ஃபோன் வை-ஃபை ஹாட்ஸ்பாட் பாஸ்வேர்டு என்ன எனத் தெரியாமல் ஃபோனில் தேடிக் கொண்டு இருந்தனர்.
பின்னர், சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்தவுடன் தான் நிம்மதி அடைந்தனர். இறுதிப் போட்டியின் போது, மின்தடை ஏற்பட்டதால் சிலர் அதிருப்தி அடைந்தனர்.


Click it and Unblock the Notifications