Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க இவங்களை நம்பினோம்.. ஆனா புரிஞ்சுக்கலை.. தோல்விக்குப் பின் விளாசிய தோனி!!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக படு சாதாரணமாக பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முக்கிய போட்டியில் ஏற்பட்ட இந்த மோசமான தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் முக்கிய காரணம் என தோனி கூறி அவர்களை விளாசினார்.

இலக்கு

இலக்கு

இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை மைதானத்தில் 160க்கும் மேல் வெற்றி இலக்கு நிர்ணயித்தால், எளிதாக வெற்றி பெறலாம்.

பேட்டிங் மோசம்

பேட்டிங் மோசம்

ஆனால், சென்னை அணி துவக்கத்திலேயே மூன்று முன் வரிசை வீரர்களான டு ப்ளேசிஸ் 6, வாட்சன் 10, சுரேஷ் ரெய்னா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினர். பின்னர் முரளி விஜய் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராயுடு 42, தோனி 37 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு மீட்டனர். எனினும், இவர்களாலும் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை.

தோனி விளாசல்

தோனி விளாசல்

ஐபிஎல் தொடரின் முக்கியமான தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்த பின், அதற்கான காரணம் குறித்து பேசிய தோனி, முதலில் ஆடுகளம் குறித்து பேசினார். பின்னர், பேட்ஸ்மேன்களை நாசூக்காக விளாசினார்.

சரியாக கணிக்கவில்லை

சரியாக கணிக்கவில்லை

"சொந்த மைதானத்தில், இதே ஆடுகளத்தில் நாங்கள் 6-7 போட்டிகள் ஆடி விட்டோம். ஆடுகளத்தை நன்றாக புரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதுதான் சொந்த மைதானத்தில் ஆடுவதன் பயன். எங்களுக்கு ஆடுகளம் எப்படி இருக்கிறது.. என தெரிந்து இருக்க வேண்டும். பந்து எழும்பி வருகிறதா.. இல்லையா.. என்பதை சரியாக (பேட்டிங்கில்) கணிக்கவில்லை. பேட்டிங் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும்"

நாங்கள் நம்பினோம்

நாங்கள் நம்பினோம்

"இவர்கள் தான் எங்களுக்கு கிடைத்த சிறந்த பேட்ஸ்மேன். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்வது போல உள்ளது. ஆனால், சில சமயம், சில போட்டிகளில் அவர்கள் ஆடக் கூடாத ஷாட்களை ஆடிவிடுகிறார்கள். இந்த வீரர்களை தான் நாங்கள் நம்பினோம், இவர்களுக்கு அனுபவம் உள்ளது, அவர்கள் சூழ்நிலையை சிறப்பாக புரிந்து கொண்டிருக்க வேண்டும்." என்றார் தோனி.

Story first published: Wednesday, May 8, 2019, 10:41 [IST]
Other articles published on May 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+