பந்தை “சுட்டது” கூட பரவாயில்லை.. ஆனா.. அவர் அடிச்ச பந்தை ஏன்பா எடுத்துட்டு போன?
Recommended Video
ஹைதராபாத் : மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது.
பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தேறின. அதில் ஒன்று தான் பந்தை லவட்டிய ரசிகர் பற்றியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது, ரோஹித் சர்மா - டி காக் துவக்கம் அளித்து ஆடினர்.
இந்தப் போட்டியின் முதல் சிக்ஸ்-ஐ இரண்டாவது ஓவரில் அடித்தார் ரோஹித் சர்மா. பந்து பவுண்டரி அருகே இருந்த முன் பகுதி ரசிகர்கள் வசம் சென்றது. ஆனால், பந்தை காணவில்லை.
பந்தை எடுத்த ரசிகர் அதை எடுத்துக் கொண்டார். வேறு வழியில்லாமல் அம்பயர்கள் புதிய பந்தை எடுத்தனர். பின்னர் ரோஹித் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அந்த காணாமல் போன பந்தை சிஎஸ்கே ரசிகர் தான் எடுத்துக் கொண்டு சென்றிருப்பார் என ஒரே பேச்சாக இருக்கிறது.
ஆமாம்.. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் அடிச்ச பந்தை.. சிஎஸ்கே ரசிகர் ஏன் எடுத்துட்டு போறார்?


Click it and Unblock the Notifications