Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த ஐபிஎல்-இல் தல ஆடுவாரா? ஏங்கிய ரசிகர்கள்.. “மய்யமாக” பதில் சொல்லி குழப்பிய தோனி!

ஹைதராபாத் : தோனி இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில், 2019 ஐபிஎல் தொடரின் முடிவில், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்த தோனி மய்யமாக பதில் சொல்லி, தெளிவாக குழப்பி விட்டார்.

தோல்வி

தோல்வி

2019 ஐபிஎல் தொடரில் தோனியின் அற்புதமான கேப்டன்சியால் இறுதிப் போட்டி வரை முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், இறுதிப் போட்டியில் வெறும் 1 ரன்னில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டி முடிந்த உடன், தோனியிடம், அடுத்த தொடரில் உங்களை பார்க்க முடியுமா? என கேட்டார் வர்ணனையாளர் சைமன் டௌல்.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

இதற்கு பதில் அளித்த தோனி, "நம்பிக்கை உள்ளது.. ஆமாம்" என பதில் அளித்தார். அப்படி என்றால் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என ரசிகர்கள் குஷி ஆனார்கள்.

சந்தேகம்

சந்தேகம்

எனினும், பின்னர் சிந்தித்து பார்த்த போது, தோனி வீரராக பங்கேற்பாரா அல்லது பயிற்சியாளர், ஆலோசகர் என்ற பெயரில் சென்னை அணியில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

கேள்வி தவறு

கேள்வி தவறு

கேள்வி கேட்டவர் நேரடியாக, "அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா?" என கேட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. ஆனால், இப்போது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Story first published: Monday, May 13, 2019, 1:48 [IST]
Other articles published on May 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+