Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க வருது பந்து? காற்றில் பேட்டை விட்டு துழாவிய உத்தப்பா.. டி20யில் மெய்டன் ஓவர் ஆடி கலக்கல்!!

Recommended Video

IPL 2019: Kolkata vs Mumbai: காற்றில் பேட்டை விட்டு துழாவிய உத்தப்பா!.. டி20யில் மெய்டன் ஓவர்-வீடியோ

மும்பை : 2019 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மிக மோசமான பேட்டிங்கிற்கான மறக்க முடியாத போட்டியாக மாறியது.

மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆடிய இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்டிங், பந்துவீச்சு என எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

வேற லெவல்

வேற லெவல்

இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் செல்லலாம் என்ற நிலையில், அந்த அணி எவ்வளவு மோசமாக செயல்பட முடியுமோ, அத்தனை மோசமாக செயல்பட்டது. அதிலும், ராபின் உத்தப்பாவின் பேட்டிங் வேற லெவலில் இருந்தது.

உத்தப்பா பேட்டிங்

உத்தப்பா பேட்டிங்

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. மூன்றாவது வரிசையில், ஏழாவது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார் உத்தப்பா. அவர் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்து வரை களத்தில் நின்றார். ஆனால், அணிக்கு உதவியாக இல்லை.

கட்டுப்பாடற்ற ஆட்டம்

கட்டுப்பாடற்ற ஆட்டம்

47 பந்துகளை சந்தித்தார் உத்தப்பா, அதில் 24 டாட் பால்கள். இன்னும் மோசமாக மொத்தம் 26 பந்துகளில் கட்டுப்பாடின்றி இருந்தார். அதாவது, பந்தை கணிக்கத் தவறி, பேட்டை காற்றில் விட்டு துழாவினார். பந்து, பேட்டில் சிக்கவில்லை. அந்தளவு மோசமான ஒரு பேட்டிங்காக அமைந்தது அவரது ஆட்டம்.

துன்ப அதிர்ச்சி

துன்ப அதிர்ச்சி

அவர் மோசமாக பந்துகளை வீணடித்ததாலோ என்னவோ, மற்ற பேட்ஸ்மேன்கள் வேகமாக பவுண்டரி அடிக்க முயற்சி செய்து விக்கெட்டை இழந்து வந்தனர். இதற்கு இடையே உத்தப்பா ஒரு மெய்டன் ஓவர் வேறு ஆடி, கொல்கத்தா ரசிகர்களுக்கு துன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

டி20யில் டெஸ்ட் போட்டி

டி20யில் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி போல மோசமாக ஆடிய உத்தப்பா 47 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இவர் ஆடிய 24 டாட் பால்களுடன், கொல்கத்தா அணி மொத்தமாக 60 டாட் பால்கள் ஆடி டி20 போட்டிகளுக்கே ஷாக் கொடுத்தது. 20 ஓவர் போட்டியில் 10 ஓவர்களுக்கு இணையாக டாட் பால்கள்!

Story first published: Monday, May 6, 2019, 12:48 [IST]
Other articles published on May 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+