Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித், டி காக் ஆட்டம் வீண்.. பட்லரின் அதிரடியில் மும்பை திணறல்.. தட்டுத்தடுமாறி ராஜஸ்தான் வெற்றி!!

மும்பை : 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் தன் இரண்டாவது வெற்றியை பெற்றது.

1
45903

மும்பை அணி பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சில் முதல் பாதியில் சொதப்பியது. கடைசி சில ஓவர்களில் மும்பை பந்துவீச்சு அபாரமாக இருந்தது. எனினும், ராஜஸ்தான் வெற்றிக்கு அருகே வந்துவிட்டதால், தட்டுத் தடுமாறி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. போட்டியில் என்னதான் நடந்தது?

மும்பை அபார துவக்கம்

மும்பை அபார துவக்கம்

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரோஹித் 47, டி காக் 81 ரன்கள் குவித்து அபார துவக்கம் அளித்தனர். டி காக் 19வது ஓவர் வரை களத்தில் நின்று பேட்டிங் செய்தார். சூர்யகுமார் யாதவ் 16, அதிரடி வீரர் பொல்லார்டு 6, இஷான் கிஷன் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஹர்திக் பண்டியா ரன் குவிப்பு

ஹர்திக் பண்டியா ரன் குவிப்பு

கடைசி ஓவர்களில் ஹர்திக் பண்டியா அதிரடியாக ரன் குவித்தார். அவர் 11 பந்துகளில் 28 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 187 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் கோபால் மட்டுமே 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து கட்டுக்கோப்பாக பந்து வீசினார்.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

அடுத்து சேஸிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ரஹானே 37 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் பட்லர் அதிரடியாக ஆடினார். 43 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். அல்சாரி ஜோசப் வீசிய ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார்.

விக்கெட்கள் சரிவு

விக்கெட்கள் சரிவு

அவர் 14வது ஓவரில் ஆட்டமிழந்த போது ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ராஜஸ்தான். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் பட்லருக்கு பின் வரிசையாக வெளியேறினர். 17, 18, 19வது ஓவர்களில் மட்டும் நான்கு விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது ராஜஸ்தான்.

தடுமாறி வெற்றி

தடுமாறி வெற்றி

சாம்சன் 31, ஸ்மித் 12, ராகுல் திரிபாதி 1, லிவிங்க்ஸ்டன் 1 என ஆட்டமிழந்து சென்ற பின் கோபால், கெளதம் அணியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இவர்கள் இருவரும் தட்டுத் தடுமாறி ரன் குவித்து 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றி தேடித் தந்தனர்.

2வது வெற்றி

2வது வெற்றி

ராஜஸ்தான் அணி இந்த சீசனில் ஏழு போட்டிகளில் ஆடி அதில் தன் இரண்டாவது வெற்றியை பெற்றது. எளிதாக வெற்றி பெற வேண்டிய இந்தப் போட்டியிலும், ராஜஸ்தான் தடுமாறியது அந்த அணிக்கு எந்த வகையிலும் தன்னம்பிக்கை அளிக்கப் போவதில்லை என்பதையே காட்டுகிறது.

Story first published: Sunday, April 14, 2019, 1:05 [IST]
Other articles published on Apr 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+