Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொக்கையான சூப்பர் ஓவரில் முடிந்த போட்டி.. மும்பை அணி சொதப்பல்.. போராடிய மனிஷ் பாண்டே!

மொக்கையான சூப்பர் ஓவரில் முடிந்த போட்டி.. மும்பை அணி சொதப்பல்.. போராடிய மனிஷ் பாண்டே!

மும்பை : 2019 ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக போட்டி டை ஆகி சூப்பர் ஓவரில் முடிவு எட்டப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

1
45927

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் குவித்தன. இதையடுத்து சூப்பர் ஓவருக்கு சென்றது போட்டி. ஆனால், சூப்பர் ஓவர் சுவாரசியம் இன்றி "சப்"பென்று முடிந்தது.

தவறான முடிவு

தவறான முடிவு

இந்தப் போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றார். டாஸ் வென்ற பின் இந்தப் போட்டி அதிக ரன்கள் குவிக்கும் போட்டியாக இருக்கும் எனக் கூறி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், அது தவறான முடிவாக பார்க்கப்பட்டது.

மும்பை நிதானம்

மும்பை நிதானம்

நினைத்தது போல முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே குவித்தது. ரோஹித் 28, சூர்யகுமார் 23, லீவிஸ் 1 என சொற்ப ரன்களில் வெளியேறினர். துவக்க வீரர் டி காக், கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று, நிதானமாக 58 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார்.

அதிரடி பேட்டிங்?

அதிரடி பேட்டிங்?

கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் குவிக்க அனுப்பப்பட்ட ஹர்திக் பண்டியா 10 பந்துகளில் 18 ரன்களும், பொல்லார்டு 9 பந்துகளில் 10 ரன்களும் சேர்த்து வெளியேறினர். ஹைதராபாத் பந்துவீச்சில் கலீல் அஹ்மது 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

ஹைதராபாத் சேஸிங்

ஹைதராபாத் சேஸிங்

அடுத்து சேஸிங் செய்ய வந்தது ஹைதராபாத் அணி. வார்னர் - பேர்ஸ்டோ இல்லாத நிலையில், அந்த அணிக்கு விரிதிமான் சாஹா - மார்டின் குப்டில் துவக்கம் அளித்தனர். சாஹா 25, குப்டில் 15 ரன்கள் சேர்த்து வெளியேறினர்.

மனிஷ் பாண்டே போராட்டம்

மனிஷ் பாண்டே போராட்டம்

அடுத்து வந்த மனிஷ் பாண்டே கடைசி வரை தனியாக போராடி வந்தார். வில்லியம்சன் 3, விஜய் ஷங்கர் 12, அபிஷேக் சர்மா, 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். கடைசியில் நபி, மனிஷுடன் இணைந்து அணியை மீட்டார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை எடுத்துச் சென்றது இந்த கூட்டணி. கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 8 ரன்கள் சேர்த்த நிலையில், 4வது பந்தில் நபி ஆட்டமிழந்தார்.

கடைசி பந்து

கடைசி பந்து

5வது பந்தில் 2 ரன் சேர்த்தார் மனிஷ். இதனால், கடைசி பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற வெற்றியை எட்ட முடியாத நிலைக்கு சென்றது ஹைதராபாத். எனினும், சிக்ஸ் அடித்தால் போட்டி டை ஆகும் என்ற நிலையில், மும்பை அணியின் ரோஹித், பொல்லார்டு ஆகியோர் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு பண்டியாவுடன் பேசினர். ஆனால், எந்த பதற்றமும் ஆடிய மனிஷ் பாண்டே கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார். மும்பை அணியின் எல்லை மீறிய பதற்றத்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் சொதப்பல்

சூப்பர் ஓவரில் சொதப்பல்

இதனால் போட்டி டை ஆனது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி சொதப்பியது. பும்ரா சூப்பர் ஓவரை வீசினார். முதல் பந்தில் மனிஷ் ரன் அவுட் ஆனார். அடுத்து சிக்ஸ் அடித்த நபி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சூப்பர் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத்.

சூப்பர் ஓவரில் வெற்றி

சூப்பர் ஓவரில் வெற்றி

அடுத்து ஹைதராபாத் அணியின் ரஷித் கான் பந்து வீசினார். மும்பை அணியின் ஹர்திக் பண்டியா முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார். அடுத்த இரு பந்துகளில் 3 ரன்கள் எடுத்த மும்பை எளிதாக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இதனால், சூப்பர் ஓவர் எந்த பரபரப்பும் இன்றி முடிந்தது. இந்த வெற்றி மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை அணி.

Story first published: Friday, May 3, 2019, 1:06 [IST]
Other articles published on May 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+