Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிச்சு சொல்றேன்.. 2021 ஐபிஎல் கோப்பை மும்பை இந்தியன்ஸ்-க்குத் தான்! எப்படி தெரியுமா?

Recommended Video

IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | 4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணி

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெறும் 1 ரன்னில் வீழ்த்திய மும்பை அணி, நான்காவது முறையாக ஐபிஎல் தொடரை வென்று சாதனை செய்தது.

இதுவரை அதிக முறை ஐபிஎல் தொடரை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது மும்பை.

சுவாரசியம்

சுவாரசியம்

இந்த சாதனைகள் ஒருபுறம் இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் வெற்றி பெறுவதில் ஒரு சுவாரசியம் அடங்கி உள்ளது. அதன்படி பார்த்தால், மும்பை அணி அடுத்து 2021இல் தான் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

எட்டில் நான்கு

எட்டில் நான்கு

ஐபிஎல் தொடரில் வருடம் விட்டு வருடம், மும்பை அணி கோப்பை வென்று வருகிறது. கடந்த 2013 தொடங்கி, 2019 வரை எட்டு வருடங்களில் நான்கு கோப்பைகளை இப்படித் தான் தட்டிச் சென்றது.

அடுத்து எப்போது வெற்றி?

அடுத்து எப்போது வெற்றி?

2013, 2015, 2017, 2019 என வெற்றி பெற்று வரும் மும்பை இதே கணக்கில் சென்றால், அடுத்து 2021இல் ஐபிஎல் கோப்பை வெல்லும் என ஐபிஎல் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இல்லாத அணிதான் கோப்பை வெல்லும் என்றும் கணிப்புகள் கூறப்படுகிறது.

சிஎஸ்கே பிளே-ஆஃப்

சிஎஸ்கே பிளே-ஆஃப்

மும்பை அணி தவிர்த்து சென்னை அணி ஐபிஎல் தொடரில் ஒரு சுவாரசியத்தை நிகழ்த்தி வருகிறது. தான் பங்கேற்ற 10 ஐபிஎல் தொடர்களிலும் பிளே-ஆஃப் அல்லது அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மும்பை வெற்றிக்கு காரணம்

மும்பை வெற்றிக்கு காரணம்

இந்த வருட ஐபிஎல் தொடரில் வலுவான பந்துவீச்சாளர்களை வைத்திருந்த அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான். பும்ரா, மலிங்கா, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, ராகுல் சாஹர் என அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்தனர். அதுவே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Monday, May 13, 2019, 15:27 [IST]
Other articles published on May 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+