Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆத்தாடி.. ஜெயிச்சா பெரிய “சி”.. தோற்றால் பாதி!! பணத்தில் குளிக்கப் போகும் சிஎஸ்கே!

Recommended Video

IPL 2019 FINALS | பணத்தில் குளிக்கப் போகும் ஐபிஎல் அணிகள்

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஹைதராபாத் நகரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது,

ஐபிஎல் தொடர் என்றாலே பணம் கொட்டும். வீரர்கள் ஏலத்தில் தொடங்கி, விளம்பரம், டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி உரிமம் என பெரும் பணம் விளையாடும்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பெரிய அளவில் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

பெரும் தொகை

பெரும் தொகை

2019 ஐபிஎல் தொடரில் வெற்றி பெரும் அணி 25 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வெல்லும். அதே சமயம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும்.

சிஎஸ்கேவுக்கு எவ்வளவு?

சிஎஸ்கேவுக்கு எவ்வளவு?

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் 25 கோடி ரூபாய் வெல்லும். தோல்வி அடைந்தாலும் சென்னை அணிக்கு 12.5 கோடி ரூபாய் கிடைக்கும். இதில் பாதித் தொகை வீரர்களுக்கும், மீதத் தொகை அணிக்கும் சென்று சேரும்.

மேலும் இரண்டு அணிகள்

மேலும் இரண்டு அணிகள்

மேலும், தொடரில் மூன்றாம் இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 10.5 கோடியும், நான்காம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு 8.5 கோடி ரூபாயும் பரிசாக கிடைக்கும். ஐபிஎல் அணிகளின் விளம்பர வருவாய் மற்றும் டிக்கெட் விற்பனை பங்கு ஆகியவற்றை கணக்கிட்டால், இந்த பரிசுத் தொகை குறைவு தான்.

வீரர்களுக்கு பரிசு

வீரர்களுக்கு பரிசு

இது தவிர தனிப்பட்ட வீரர்களுக்கு பல திறன்களின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். அதிக ரன்கள் குவித்த வீரருக்கும், அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளருக்கும் தலா 10 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

மதிப்புடைய வீரர்

மதிப்புடைய வீரர்

இது தவிர அதிக மதிப்புடைய வீரர் என்ற பெயரில் களத்தில் வீரர்களின் செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடம் பெரும் வீரருக்கும் 10 லட்ச ரூபாய் பரிசாக கிடைக்கும்.

Story first published: Sunday, May 12, 2019, 13:38 [IST]
Other articles published on May 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+