Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல ஆடுறதை கணக்கில் எடுத்துக்காதீங்க.. அது வேற.. இது வேற.. ரோஹித் சர்மா உஷார்!

மும்பை : 2019 ஐபிஎல் தொடர் முடிந்த இரு வாரங்களில் 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 20 அல்லது அதன் பின் அறிவிக்கப்படும் என தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

ஐபிஎல் செயல்பாடு

ஐபிஎல் செயல்பாடு

இந்த நிலையில் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாட்டை, உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வுக்கு தேர்வாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

நிறைய ஆடியாச்சு

நிறைய ஆடியாச்சு

இந்திய வீரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிக சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார்கள். மேலும், 50 ஓவர் போட்டிக்கு, 20 ஓவர் போட்டிகளின் செயல்பாடுகளை வைத்து அணித்தேர்வு செய்யக் கூடாது. இது என் தனிப்பட்ட கருத்து எனவும் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

கேப்டன், பயிற்சியாளர் முடிவு

கேப்டன், பயிற்சியாளர் முடிவு

சில இடங்களுக்கு மட்டுமே சரியான வீரர்களை முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த இடங்கள் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்தது என்றார் ரோஹித் சர்மா.

தேர்வுக் குழு உறுதி

தேர்வுக் குழு உறுதி

ரோஹித் சர்மா கூறுவதை ஏற்கனவே தேர்வுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் அடிப்படையில் உலகக்கோப்பை அணித் தேர்வு இருக்காது என பல முறை கோலி மற்றும் தேர்வுக்குழு கூறினாலும், ரசிகர்களுக்கு சந்தேகம் உள்ளது.

இவரை சேருங்க!

இவரை சேருங்க!

பலர் ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் அதிரடியாக ஆடும் போது அவர்களை உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என சில ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர். எனவே, அது போல எதுவும் நடந்து விடக் கூடாது என ரோஹித் சர்மா முன்னெச்சரிக்கையாக இப்படி பேட்டி கொடுத்துள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.

Story first published: Thursday, April 4, 2019, 20:47 [IST]
Other articles published on Apr 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+