Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வீரர்கள் டக் அவுட் ஆனாலும் வென்றது ராஜஸ்தான்.. எல்லாம் இருந்தும் தோற்றது மும்பை!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 2019 ஐபிஎல் தொடரில் ஒன்பது போட்டிகளில் தன் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு முன் ராஜஸ்தான் அணி ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. மீதமுள்ள தொடருக்கு ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது.

ரோஹித் ஏமாற்றம்

ரோஹித் ஏமாற்றம்

புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் 34, டி காக் 65 ரன்கள் சேர்த்தனர்.

மும்பை இன்னிங்க்ஸ்

மும்பை இன்னிங்க்ஸ்

கடைசி 5 ஓவர்களில் ஹர்திக் பண்டியா 23, பொல்லார்டு 10, பென் கட்டிங் 13, க்ருனால் பண்டியா 2 ரன்கள் சேர்த்தனர். மும்பை 20 ஓவர்களில் 161 ரன்கள் சேர்த்தது. குல்கர்னி, உனட்கட் தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசினர்.

சுமாரான துவக்கம்

சுமாரான துவக்கம்

அடுத்து சேஸிங் துவங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே 12 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாரான துவக்கம் அளித்தார். சஞ்சு சாம்சன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார்.

டக் அவுட் வீரர்கள்

டக் அவுட் வீரர்கள்

பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பின்னர், 17 வயது இளம் வீரர் ரியான் பராக், ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டார். பராக் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆஷ்டன் டர்னர் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

ஸ்டீவ் ஸ்மித் அசத்தல்

ஸ்டீவ் ஸ்மித் அசத்தல்

கடைசி ஓவரில் ஸ்டூவர்ட் பின்னி ஃபோர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 48 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது ராஜஸ்தான். மும்பை அணியின் ராகுல் சாஹர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். மலிங்கா, பும்ரா, ஹர்திக் பண்டியா உள்ளிட்ட வீரர்கள் இருந்தும் மும்பை தோல்வி அடைந்தது ஏமாற்றமாக இருந்தது.

Story first published: Saturday, April 20, 2019, 20:45 [IST]
Other articles published on Apr 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+