Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2019:சென்னையின் வெற்றி ரகசியம் தெரியுமா… ? உண்மையை உடைத்த சின்ன தல

சென்னை:வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அணியாக சிறப்பாக செயல்படுவதே சிஎஸ்கே அணியின் வெற்றி ரகசியம் என்று சின்ன தல சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாகும். இதுவரை முடிந்துள்ள 11 ஐபிஎல் சீசன்களில் 3 முறை சிஎஸ்கே அணியானது, 2010, 2011, 2018 ஆகிய மூன்று சீசன்களிலும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

2008, 2012, 2013, 2015 ஆகிய 4 சீசன்களிலும் இறுதி போட்டி வரை சென்றுள்ளது. அதாவது 11 சீசன்களில் 7 சீசன்களில் இறுதி போட்டிவரை சென்ற அணி சென்னை.

சிஎஸ்கே பெருமை

சிஎஸ்கே பெருமை

11 சீசன்களில் தடை காரணமாக 2 சீசன்களில் ஆடவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால், விளையாடிய 9 சீசன்களில் 7 சீசன்களில் இறுதி போட்டியில் ஆடிய பெருமையை பெற்றிருக்கிறது.

அனுபவமே காரணம்

அனுபவமே காரணம்

சிஎஸ்கே வெற்றிக்கு காரணம்... சொல்லாமல் தெரிந்திருக்கும் அவர் தான் தல தோனி. தோனியின் அனுபவமும், அணியை வழி நடத்திச் செல்லும் அவரது திறனும் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகும். அவரது தலைமையில் வெற்றி சதவீதம் அதிகம்.

அணியே குடும்பம்

அணியே குடும்பம்

சென்னை அணியில், தோனியுடன் ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் நிரந்தர வீரர்களாக உள்ளனர். அணியின் மற்ற வீரர்கள் கூறுவது எல்லாமே... குடும்பமாக இணைந்து ஒற்றுமையாக விளையாடுவதாக கூறியுள்ளனர்.

ஐபிஎல் திருவிழா

ஐபிஎல் திருவிழா

ஐபிஎல் 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. மிக பெரிய விளையாட் திருவிழாவான அந்த தொடருக்காக ரசிகர்கள் மட்டுமன்றி... வீரர்களும் காத்திருக்கின்றனர்.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

இந்த தருணத்தில் சென்னை அணியின் வெற்றிக்கான என்ன காரணம் என்று சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னா கூறியிருக்கிறார். அவர் கூறுவது இது தான்:சென்னை அணியின் சிறந்த விஷயம் அணியாக செயல்படுவது.

அணியாக விளையாடுவது

அணியாக விளையாடுவது

ஒரு அணியாக சிறப்பாக செயல்படுவோம். நிறைய மாற்றங்களை செய்யக் கூடாது. ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை வைத்து ஒரு அணியாக சிறப்பாக ஆடுவதுதான் வெற்றியின் ரகசியம் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, March 10, 2019, 12:58 [IST]
Other articles published on Mar 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+