
மும்பை அணியின் பிரச்சனை
மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பல போட்டிகளில் தோல்வி அடைய காரணம், பலவீனமான மிடில் ஆர்டர் தான் என்ற முடிவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வந்துள்ளது.

மிடில் ஆர்டர் தீர்வு
இதை அடுத்து, அந்த அணி மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்க சரியான வீரரை தேடி வந்துள்ளது. இந்த நிலையில் தான், கடைசி நேரத்தில் யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

ஜாகிர் கான் கருத்து
ஜாகிர் கான் கூறுகையில், யுவராஜ் சிங் போட்டியை வென்று கொடுக்கும் திறன் பெற்றவர் என்பது அணிக்கு பெரிய பலம். ரோஹித் சர்மா தற்போது துவக்க வீரராக இறங்க உள்ளதால், யுவராஜ் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவார் என குறிப்பிட்டார்.

யுவராஜ் சிங் மீள்வாரா?
எனினும், யுவராஜ் சிங் பார்ம் அவுட் ஆகி, தன் இயல்பான பேட்டிங்கை மீட்க முடியாமல் திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருக்கு அதிக ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அவர் தன் பார்மை மீட்கவும் வாய்ப்புள்ளது.

உலகக்கோப்பை நாயகன்
2011 உலகக்கோப்பையின் நாயகன் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அவர் கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இழந்து இருப்பது ரசிகர்களுக்கு கவலையாக இருந்து வந்தது. தற்போதைய ஐபிஎல் தொடர் தான் அனேகமாக யுவராஜ் சிங்கின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும். எனவே, யுவராஜ் சிங் தன் ரசிகர்களுக்காக தன் இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும்.


Click it and Unblock the Notifications
