Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேர்தல் நடந்தாலும் ஐபிஎல் 2019 இந்தியாவில் தான் நடக்கும்.. பிசிசிஐ அதிரடி.. துவக்க தேதியில் மாற்றம்

Recommended Video

தேர்தல் நடந்தாலும் ஐபிஎல் 2019 இந்தியாவில் தான் நடக்கும், பிசிசிஐ அதிரடி- வீடியோ

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக்-கின் 12வது சீசன் இந்த முறை இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி இருந்து வந்தது.

தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. ஐபிஎல் 2019 தொடர் இந்தியாவில் தான் நடைபெற உள்ளது. அதே சமயம், அதன் தேதிகளில் மற்றும் சிறிய மாற்றம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு செல்லுமா?

வெளிநாட்டிற்கு செல்லுமா?

கடந்த காலங்களில் தேர்தல் சமயங்களில் ஐபிஎல் தொடர் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதே போல 2019 பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த முறையும் ஐபிஎல் தொடர் வெளிநாட்டிற்கு செல்லும் என கூறப்பட்டு வந்தது.

இந்தியாவில் தான் ஐபிஎல்

இந்தியாவில் தான் ஐபிஎல்

தற்போது கிரிக்கெட் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் பேசிய பின்னர் ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே தொடரலாம் என முடிவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டிற்கு ஐபிஎல் செல்லவில்லை என உறுதியாகி உள்ளது.

மார்ச் 23 முதல் துவங்கும்

மார்ச் 23 முதல் துவங்கும்

எனினும், தேர்தல் மற்றும் மே மாதம் துவங்க உள்ள உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து ஐபிஎல் தொடங்கும் தேதியை மாற்றியுள்ளனர். ஐபிஎல் தொடர் மார்ச் 23 முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை மாற்றம்

போட்டி அட்டவணை மாற்றம்

மார்ச் 23 அன்று தொடங்கும் ஐபிஎல் 2019 சீசனின், முழு போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்கும் நாட்களில் போட்டி நடக்குமா என்பது தெரியவில்லை.

தேர்தல் தேதி இல்லையே

தேர்தல் தேதி இல்லையே

2019 பொதுத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் பல்வேறு நாட்களில் தடைபடும் நிலை ஏற்படலாம். தேர்தல் தேதி தெரியாத நிலையில் எப்படி போட்டி அட்டவணை தயாரிப்பார்கள் என்ற சந்தேகமும் உள்ளது.

Story first published: Tuesday, January 8, 2019, 17:20 [IST]
Other articles published on Jan 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+