Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழியை தூக்கி அவர் மீது போட வேண்டாம்.. திசை திருப்பும் தோனி.. போட்டிக்கு நடுவே நடந்த தவறு.. பின்னணி!

அபுதாபி: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனி செய்த 3 முக்கியமான தவறுகளும் காரணமாக பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவிற்கு எதிரான நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெல்வதற்கு வாய்ப்பு இருந்தும் கூட தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 167 ரன்கள் எடுத்தது.

அதன்பின் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே வெறும் 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

காரணம்

காரணம்

சிஎஸ்கேவின் தோல்விக்கு பலரும் கேதார் ஜாதவ் மீது புகார் வைத்து வருகிறார்கள். கேதார் செய்த மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் காரணமாகவே சிஎஸ்கே தோல்வி அடைந்தது என்று அவருக்கு எதிராக புகார் வைத்து வருகிறார்கள். ஜாதவ் பேட்டிங் செய்ய வந்த போது சிஎஸ்கே 21 பந்தில் 39 ரன்கள் அடிக்க வேண்டும்.

வெற்றிபெற வாய்ப்பு

வெற்றிபெற வாய்ப்பு

நேற்று சிஎஸ்கேவிற்கு வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. ஜடேஜாவிற்கு ஸ்டிரைக் கிடைத்து இருந்தால் கூட அவர் வெற்றிபெற்று இருப்பார். ஆனால் ஜடேஜாவிற்கு கூட ஜாதவ் ஸ்டிரைக் கொடுக்கவில்லை. ஜாதவ் 12 பந்துகள் பிடித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் ஜாதவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன

ஆனால் உண்மை என்ன

ஆனால் சிஎஸ்கேவின் தோல்விக்கு ஜாதவ் மட்டுமே காரணம் இல்லை. ரசல் ஓவரில் கடைசியில் அவர் ரன் அடிக்க முடியாமல் திணறியது உண்மைதான். ஆனால் சிஎஸ்கே தோல்விக்கு தோனி செய்த மூன்று முக்கியமான தவறுகளும் காரணமாக மாறியுள்ளது. நேற்று தோனி செய்த முதல் தவறு, பேட்டிங் ஆர்டரை மாற்றி இறங்கியது.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

நேற்று கொல்கத்தார் ஸ்பின் பவுலர்கள் நரேன், சக்ரவர்த்தி இருவருக்கும் 10 ஓவர்களுக்கு பின் நிறைய ஓவர் மீதம் இருந்தது. இவர்கள் இருவருக்கும் ஓவர் இருக்கும் போது தோனி களமிறங்கியது தவறு. ஏனென்றால் வாட்சன், தோனி இருவரும் ஸ்பின் பவுலிங்கில் திணற கூடியவர்கள். அப்படி இருக்கும் போது வாட்சன் களத்தில் இருக்கும் போது தோனி வந்தது தவறு. ஸ்பின் பவுலிங்கில் அடிக்க கூடிய சாம் அல்லது பிராவோ களமிறங்கி இருக்க வேண்டும்.

ஆனால் செய்யவில்லை

ஆனால் செய்யவில்லை

ஆனால் தோனி அதை செய்யவில்லை. அடுத்தாக மிடில் ஆர்டரில் தோனி ரன் எடுக்காமல் விட்டது. நேற்று 13வது ஓவரில் ராயுடு அவுட் ஆன பின் வரிசையாக சிஎஸ்கேவின் ரன் ரேட் குறைந்தது. மிடில் ஓவர்களில் 30 பந்தில் சிஎஸ்கே வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சமயத்தில் தோனியும் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி ஓவர்

எப்படி ஓவர்

11-15 ஓவரில் சிஎஸ்கே ஆடிய விதம்தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. சிஎஸ்கே சார்பாக அப்போது தோனியும் பேட்டிங் செய்தார். இவரும் மோசமாகவே ஆடினார்.

  • 11வது ஓவர் - கும்மின்ஸ்- 0 1 1 1 WD 0 (ராயுடு, வாட்சன்)
  • 12வது ஓவர் - நரேன்- 0 2 0 1 1 1 (ராயுடு, வாட்சன்)
  • 13வது ஓவர்- நாகர்கோட்டி - W 0 1 0 0 1 (வாட்சன், தோனி)
  • 14வது ஓவர் - நரேன்- W 0 2 1 0 0 (தோனி, சாம் கரன் )
  • 15வது ஓவர் - நரேன்- 0 1 0 2 2 1 (தோனி, சாம் கரன்)
தோனி

தோனி

இந்த போட்டியில் 12 பந்துகள் பிடித்த தோனி 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கேதார் ஜாதவ் பேட்டிங்கை மற்றும் குறை கூறி அவர் மீது மட்டும் பழியை போடுவது தவறு. சிஎஸ்கே தோல்விக்கு ஜாதவ் எந்த அளவிற்கு காரணமோ அதே அளவிற்கு தோனியும் காரணம்.

மூன்றாவது தவறு

மூன்றாவது தவறு

தோனி செய்த மூன்றாவது தவறு, பிராவோவை பேட்டிங் அனுப்பாமல் ஜாதவை பேட்டிங் அனுப்பியது. ஸ்பின் பவுலர்களுக்கு ஓவர் இருக்கும் போது பிராவோவை அனுப்பி இருந்தால் போட்டியை மாற்றி இருப்பார். ஆனால் தோனி ஏன் ஜாதவை அனுப்பினார் என்று யாருக்கும் தெரியாது. இதுவும் கூட சிஎஸ்கேவின் மோசமான தோல்விக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 8, 2020, 10:34 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+