Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 3 விஷயங்கள்தான் காரணம்.. இதை செய்தால் போதும் சிஎஸ்கே பிளே-ஆப் உறுதி.. தோனியின் புதிய வியூகம்!

துபாய்: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு மூன்று முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடர் நினைத்து பார்க்க முடியாத திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கிய சிஎஸ்கே இந்த தொடரில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போனது.

இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. நேற்று ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

திணறல்

திணறல்

இந்த தொடரின் தொடக்கத்தில் சிஎஸ்கே பல்வேறு விஷயங்களால் கடுமையாக திணறியது. முதல் விஷயம் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடாமல் திணறியது பிரச்சனையாக பார்க்கப்பட்டது. அதன்பின் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிக அழுத்தம் காரணமாக, சரியாக பேட்டிங் செய்யாமல் சொதப்பியது, கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே பெரிதாக ரன் அடிக்காதது காரணமாக இருந்தது.

வேறு என்ன

வேறு என்ன

அதேபோல் முதல் பவர் பிளேவில் சிஎஸ்கே 40 ரன்கள் கூட எடுக்க முடியாமல் திணறியது இன்னொரு காரணமாக பார்க்கப்பட்டது. அதேபோல் சிஎஸ்கேவின் ஸ்பின் பவுலர்கள் சரியாக பவுலிங் செய்யாமல் போனதும் சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் அனைத்து பிரச்சனைக்கும் நேற்று சிஎஸ்கே தீர்வு கண்டு உள்ளது.நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு மூன்று முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணம் 1

காரணம் 1

முதல் விஷயம் சிஎஸ்கே அணியின் ஒப்பனராக சாம் கரன் இறங்கியது. இனி இவர்தான் சிஎஸ்கே ஓப்பனர் என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. இவர் ஓப்பனிங் இறங்குவதால், முதல் 5 ஓவர்களில் சிஎஸ்கே நல்ல ரன் அடிக்க முடிகிறது. இவர் செஞ்சுரி அடிக்க தேவையில்லை. அதிரடியாக 30-35 ரன்கள் அடித்து, 5 ஓவருக்குள் நல்ல தொடக்கம் கொடுத்தால் போதும்.

சரியாக செய்தார்

சரியாக செய்தார்

நேற்று அந்த தொடக்கத்தை சாம் கரன் சிறப்பாக செய்து கொடுத்தார். அதிரடியாக களமிறங்கியவர் பிளேவில் ரன் ரேட்டை உயர்த்திவிட்டு சென்றார். அதற்கு பின் வந்த வாட்சன், ராயுடுவிற்கு இது வசதியாக இருந்தது, களத்தில் டென்சன் இன்றி ஆட விரும்பும் வாட்சனுக்கு இது வசதியாக உள்ளது. வாட்சனால் இன்னொரு பக்கம் ராயுடுவும் அதிரடியாக ஆட முடிகிறது.

காரணம் 2

காரணம் 2

சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் பிரச்சனை இப்போதுதான் சரியாகி உள்ளது. சாம் கரன், டு பிளசிஸ், வாட்ஸன், ராயுடு, தோனி, ஜடேஜா என்று களமிறங்குவது சிஎஸ்கேவிற்கு கூடுதல் பலம் கொடுக்கிறது. இதனால் சிஎஸ்கேவிற்கு கூடுதலாக ஜெகதீசன் போன்ற வீரர்களே தேவைப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் 3

காரணம் 3

இன்னொரு பக்கம் சிஎஸ்கே 2 முழு நேர ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்குவது முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் 7 பவுலிங் ஆப்ஷன் சிஎஸ்கேவிற்கு உள்ளது. ஆகவே ஒரு பவுலர் சொதப்பினால் இன்னொரு பவுலர் களத்தில் விக்கெட் கொடுக்க முடியும். சிஎஸ்கேவிடம் மிஸ்ஸாகி வந்த 2 ஸ்பின் பவுலிங் ஆப்ஷன் தற்போது பூர்த்தியாகி உள்ளது.

நல்லது

நல்லது

சிஎஸ்கேவில் பல நாட்களாக நிலவி வந்த எல்லா பிரச்சனைக்கும் நேற்று தீர்வு காணப்பட்டுள்ளது. இதே அணியை பின்பற்றினால் சிஎஸ்கே பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். சிஎஸ்கேவின் இந்த புதிய வியூகம் கண்டிப்பாக அணிக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 14, 2020, 10:47 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+