Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவறு தொடங்கியது இங்குதான்.. 2021 வரை காத்திருங்கள்.. சிஎஸ்கேவில் என்ன பிரச்சனை? வெளியான தகவல்!

துபாய்: சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணம், அணிக்குள் என்ன பிரச்சனை நிலவுகிறது என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மிக மோசமாக ஆடி வருகிறது. ஐபிஎல்லின் முதல் பாதி முடிந்து உள்ள நிலையில்.. இரண்டாம் பாதி ஆட்டங்களில் நாளை சிஎஸ்கே களமிறங்குகிறது.

இதுவரை 7 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் இனிவரும் 7 போட்டிகளில் கண்டிப்பாக 6 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ளது.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

சிஎஸ்கேவின் தோல்விக்கு 5 காரணங்கள் சொல்லப்படுகிறது.

  • காரணம் 1- மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆட பேட்ஸ்மேன்கள் இல்லாதது.
  • காரணம் 2- ரெய்னா இல்லாத காரணத்தால் பேட்டிங் ஆர்டரில் லெப்ட் - ரைட் காம்பினேஷன் இல்லாமல் போனது. ரெய்னா அதிரடி அணிக்குள் இல்லாமல் போனது.
  • காரணம் 3- ஸ்பின் பவுலர்கள் மேட்ச் வின்னர்களாக மாற முடியவில்லை.
  • காரணம் 4 - வீரர்களின் வயோதிகம் காரணமாக தோனி உட்பட பலர் பார்ம் அவுட் ஆனது.
  • காரணம் 5-பென்ச்சில் சிறந்த மாற்று வீரர்கள் இல்லாமல் போனது.
என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்த 5 பிரச்சனைகள்தான் சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு காரணம் ஆகும். இந்த பிரச்சனைகள் தொடங்கியது இப்போது அல்ல 2018ல். ஆம் 2018ல் சிஎஸ்கே ஏலம் எடுத்த போதே நிறைய தவறுகளை செய்துவிட்டது. அணி முழுக்க வயதான வீரர்களை எடுத்தது. இதற்கு அனுபவம் காரணம் என்று சொல்லப்பட்டாலும் அவர்களுக்கு மாற்றாக பென்ச்சில் உட்கார வைக்க இளம் வீரர்கள், ஹிட்டர்கள் எடுக்கப்படவில்லை.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

சிஎஸ்கே அணிக்குக்குள் மோசமாக ஆடும் ஒருவரை உட்கார வைத்துவிட்டு இன்னொரு வீரரை கொண்டு வரலாம் என்று யோசித்தால் கூட யாருமே இல்லை. ஆடும் 11 பேர் அணியிலும் சரி, பென்ச்சில் இருக்கும் அணியிலும் சரி.. அதிரடி ஹிட்டர்கள் தற்போது இல்லை. பென்ச்சில் இருக்கும் வீரர்களும் பவுலர்களாக இருப்பதால் சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் மோசமாக இருக்கிறது.

2018

2018

2018லேயே சிஎஸ்கே இந்த தவறை செய்துவிட்டது.அதேபோல் ரெய்னாவிற்கு மாற்று வீரர்களை அப்போதே சிஎஸ்கே எடுக்க தவறிவிட்டது. இன்னொரு பக்கம் அம்பதி ராயுடு, ஜாதவ் போன்ற மிடில் ஆர்டர் வீரர்களுக்கும் மாற்று வீரர்கள் இல்லை. இதெல்லாம் போக இந்திய ஸ்பின் பவுலர்களை அணியில் எடுக்க சிஎஸ்கே தவறிவிட்டது. ஹர்பஜனை மட்டும் நம்பியது தவறாக முடிந்துவிட்டது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

சிஎஸ்கேவில் நிலவும் பிரச்சனைகளை எளிதாக தீர்க்கலாம். ஆனால் பிரச்சனைகளை தீர்க்க மாற்று வீரர்கள் இல்லை என்பதுதான் பிரச்சனையே. சிஎஸ்கேவில் முழுமையாக பிரச்சனையை தீர்க்க 2021 வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.ஆம் இனி 2021 ஐபிஎல் சீசனுக்கு முன்தான் பெரிய ஏலம் நடக்கும். அதுவரை சிஎஸ்கே காத்திருக்க வேண்டும்.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

அதற்கு முன்பாக இன்னும் சில நாட்களில் இந்த சீசனில் டிரான்ஸ்பர் நடக்கும். அப்போது சிஎஸ்கே நல்ல பேட்ஸ்மேன்களை அணியில் எடுக்கலாம். ஆனால் சிஎஸ்கே பெரும்பாலும் அணிக்குள் இதுபோன்ற டிரான்ஸ்பர் வீரர்களை எடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் முழுமையான மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் 2021 வரை சிஎஸ்கே காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 14, 2020, 20:56 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+