Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைகீழாக மாறிவிட்டது.. ரோஹித் சர்மா நினைத்து பார்க்காத திருப்பம்.. தோனி ஸ்டைலில் பாண்டிங் வைத்த செக்

துபாய்: ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அணியில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் மொத்தமாக அந்த அணியின் தோற்றத்தையே மாற்றி உள்ளது. மோசமாக திணறி வந்த டெல்லி அணி இதனால் பார்மிற்கு திரும்பி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் 7 போட்டிகளில் 5ல் வென்று டெல்லி அணி சிறப்பாக ஆடியது. ஆனால் அதன்பின் வரிசையாக தோல்விகளை தழுவி டெல்லி அணி சொதப்பியது.

டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பிய காரணத்தால்.. வரிசையாக அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. டெல்லி அணியின் சரிவு அணியின் பயிற்சியாளர் பாண்டிங்கிற்கு பெரிய அழுத்தம் கொடுத்தது.

டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் செல்ல 15 லட்ச ரூபாய்... 195 நாடுகளை சேர்ந்தவர்கள் விருப்பம்!

என்ன நடந்தது

என்ன நடந்தது

டெல்லி அணியின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடாததுதான் அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக இருந்தது. டெல்லியில் ஓப்பனிங் இறங்கி வந்த ப்ரித்வி ஷா எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. தவானுக்கு சரியான சப்போர்ட்டை அவர் கொடுக்கவில்லை. இதனால் ரஹானேவை ஓப்பனிங் இறக்கி டெல்லி அணி சோதனை செய்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ரஹானேவும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பவர்பிளேவில் அவர் மிகவும் மெதுவாக ஆடியது பெரிய அளவில் சர்ச்சையானது. இதனால் டெல்லி அணி வெற்றிபெற வாய்ப்பு இருந்த போட்டிகளில் கூட தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் டெல்லி அணியில் பாண்டிங் செய்த சிறிய மாற்றம் மொத்தமாக அந்த அணியின் தோற்றத்தையே மாற்றி உள்ளது. மோசமாக திணறி வந்த டெல்லி அணி இதனால் பார்மிற்கு திரும்பி உள்ளது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

டெல்லி அணியின் ஓப்பனிங் வீரர் பிரித்வி ஷாவை தூக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்டாய்னிசை பாண்டிங் நேற்று ஓப்பனிங் களமிறங்கினார். இது மொத்தமாக அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றி.. பெரிய அளவில் அணிக்கு வலிமை சேர்த்துள்ளது.அதேபோல் ஹெட்மெயரை 4வது இடத்தில் பண்டிற்கு முன் பாண்டிங் இறக்கிவிட்டார். இடம் மாறி இறங்கிய இருவருமே நேற்று சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

சிறப்பு

சிறப்பு

நேற்று ஸ்டாய்னிஸ் 38 ரன்களும், ஹெட்மேயர் 42 ரன்களும் எடுத்தனர். மொத்தமாக டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர் பலத்தை இது மாற்றி உள்ளது. சிஎஸ்கே அணியும் இதேபோல் ஓப்பனர்கள் இல்லாமல் திணறி வந்தது. அப்போது தோனி சாம் கரனை துணிச்சலாக ஓப்பனிங் இறக்கினார். அது பெரிய அளவில் கை கொடுத்தது.. தற்போது தோனி ஸ்டைலில் பாண்டிங்கும் மாற்றம் செய்துள்ளார்.

ஓப்பனர்

ஓப்பனர்

பிபிஎல் போட்டிகளில் தன்னை சிறந்த ஓப்பனர் என்று ஸ்டாய்னிஸ் நிரூபித்துள்ளார். இதனால் மும்பை அணிக்கு இப்போதுதான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியை சாதாரணமாக நினைத்த மும்பை கேப்டன் ரோஹித்திற்கு இந்த மாற்றம் மூலம் பாண்டிங் செக் வைத்துள்ளார். இந்த புதிய பேட்டிங் ஆர்டருக்கு ஏற்றபடி இறுதி போட்டியில் திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் இருக்கிறார்.

Story first published: Monday, November 9, 2020, 9:08 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+