Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இதுதான் கடைசி".. பாண்டிங்கிடம் பேசிய அஸ்வின்.. ஐசிசிக்கு பறந்த அவசர கடிதம்.. அதிரடி பின்னணி!

துபாய்: டெல்லி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் செய்த காரியம் காரணமாக தற்போது சர்வதேச அளவில் கிரிக்கெட் விதியில் மாற்றம் கொண்டு வர ஆலோசனைகள் நடந்து வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளில் மன்கட் அல்லது பிரவுன் விக்கெட் என்று அழைக்கப்படும் விக்கெட் முறை மிகவும் பிரபலம் ஆகும். இந்த விக்கெட் முறை மூலம் ரன்னர் எண்டில் இருக்கும் வீரர் கிரீஸை தாண்டி நிற்கும் போது, பவுலர் அவரை விக்கெட் எடுக்க முடியும்.

அதாவது ரன்னர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் நிற்காமல் வெளியே நின்றால் அவரை பவுலர் விக்கெட் எடுக்க முடியும். பொதுவாக பவுலர்கள் இந்த விக்கெட் எடுப்பதை விரும்பமாட்டார்கள்.

ஏன் விரும்ப மாட்டார்கள்

ஏன் விரும்ப மாட்டார்கள்

சர்வதேச போட்டிகளில் பெரும்பாலும் வீரர்கள் இப்படி மன்கட் முறையில் விக்கெட் எடுக்க மாட்டார்கள். இது ஐசிசி அனுமதித்த விதிதான். ஆனாலும் பவுலர்கள் இந்த முறையில் விக்கெட் எடுக்க மாட்டார்கள். தேவையில்லாத விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் இப்படி விக்கெட் எடுக்க மாட்டார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தமிழக வீரர் அஸ்வின் இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் அஞ்ச கூடியவர் கிடையாது.கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின் மன்கட் விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் விக்கெட்டை அவர் மன்கட் முறையில் எடுத்தார். இது பெரிய அளவில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

ஆர்வம்

ஆர்வம்

இதனால் அஸ்வினை பலரும் கிண்டல் செய்து இருந்தனர். ஆனால் அஸ்வின் அதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் இந்த சீசனில் அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியின் கோச் ரிக்கி பாண்டிங்.. மன்கட் விக்கெட் முறைக்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரானவர்

எதிரானவர்

இதனால் அஸ்வின் இந்த சீசனில் மன்கட் விக்கெட் எதையும் எடுக்கவில்லை. ஆனால் பெங்களூருக்கு எதிரான போட்டியில் அஸ்வின் வீசிய மூன்றாவது ஓவரில் ஆரோன் பின்ச் ரன்னர் எண்டில் இருந்தார். அஸ்வின் பந்து வீசும் போது, ஆரோன் பின்ச் கிரீசை தாண்டி நின்று கொண்டு இருந்தார். இதனால் பின்சை மன்கட் விக்கெட் எடுக்க அஸ்வின் முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் விக்கெட் எடுக்காமல் அவருக்கு வார்னிங் கொடுத்தார். இது பெரிய அளவில் வைரலானது.

எப்படி

எப்படி

பொதுவாக வீரர்கள் இப்படி கிரீஸை தாண்டி நிற்பது எளிதாக ரன் எடுக்க உதவும். இதனால் ஒரு ரன் ஓட வேண்டிய இடத்தில் வீரர்கள் இரண்டு ரன் ஓட முடியும். பக்கத்திலேயே அடித்துவிட்டு எளிதாக ஒரு ரன் எடுக்க முடியும். இது ஒரு வகையான ஏமாற்று வேலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வார்னிங்

வார்னிங்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அஸ்வின், 2020ம் வருடத்தில் நான் கொடுக்கும் முதல் மற்றும் கடைசி வார்னிங் இது. இனிமேல் என் மீது பழி போட கூடாது. மன்கட் செய்துவிடுவேன் என்று அஸ்வின் குறிப்பிட்டார். இந்த நிலையில் இந்த மன்கட் குறித்து ஐசிசிக்கு பாண்டிங் கடிதம் எழுதி உள்ளார். ரன்னர் எண்டில் இருக்கும் வீரர்கள் கிரீஸை தாண்டி நின்றால் அபராதம் விதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

கடிதம்

அதாவது ரன்னர் எண்டில் இருக்கும் வீரர்கள் கிரீஸை தாண்டி நின்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அல்லது அணியின் ரன்களில் குறிப்பிட்ட அளவு ரன்களை குறைக்க வேண்டும் என்று பாண்டிங் கோரிக்கை வைத்து இருக்கிறார். இவரின் கோரிக்கையை ஐசிசி பரிசீலித்து வருகிறது. விரைவில் மன்கட் குறித்து முக்கியமான முடிவுகளை ஐசிசி எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Friday, October 9, 2020, 15:03 [IST]
Other articles published on Oct 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+