Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு கேப்டன் பதவி காலி.. அதற்குள் அடுத்த கேப்டனுக்கு சிக்கலா? ஒரே ஒரு டிவிட்டால் சர்ச்சை..உண்மை என்ன?

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்துள்ள நிலையில் ராஜஸ்தான் கேப்டனும் பதவி விலக போவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் முடிவு எடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

இவரின் ராஜினாமாவை கொல்கத்தா அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இவருக்கு பதிலாக இயான் மோர்கன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏன் நீக்கம்

ஏன் நீக்கம்

கேப்டன்சி சரியாக செய்யவில்லை என்று தினேஷ் கார்த்திக் மீது புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. 7 போட்டிகளில் 4 போட்டிகளில் கொல்கத்தா வென்றுள்ளது. 3 போட்டிகளில் மட்டுமே கொல்கத்தா தோல்வி அடைந்து இருந்தாலும் கூட தினேஷ் கார்த்திக் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் ராஜினாமா செய்து இயான் மோர்கனுக்கு வழி விட்டுள்ளார்.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்துள்ள நிலையில் ராஜஸ்தான் கேப்டனும் பதவி விலக போவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. அதாவது ராஜஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலக்கிவிட்டு ஜோஸ் பட்லர் பதவி ஏற்க போகிறார் என்று செய்திகள் வெளியானது.

டிவிட்டர் சர்ச்சை

டிவிட்டர் சர்ச்சை

ராஜஸ்தான் அணியின் டிவிட்டர் பக்கம் வெளியிட்ட சில புகைப்படங்களும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது. ராஜஸ்தான் டிவிட்டர் பக்கம் வெளியிட்ட டிவிட் ஒன்றில் ஜோஸ் பட்லர் புகைப்படத்தை போட்டு ''பாஸ்'' என்று குறிப்பிட்டு இருந்தனர். ஜோஸ் பட்லர் போல ஒரு பாஸ் இருப்பதற்கு நன்றி என்று ராஜஸ்தான் டிவிட்டர் பக்கம் குறிப்பிட்டு இருந்தது. ஸ்மித் இருக்கும் போது பட்லரை பாஸ் என்றதுதான் சர்ச்சையானது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

சரியாக தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்த அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி இந்த டிவிட்டை செய்தது. இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக வதந்திகள் பரவியது. கிரிக்கெட் வல்லுநர்கள், விமர்சகர்கள் சிலர் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் கேப்டன் பதவியில் இருந்தே ராஜினாமா செய்துவிட்டார் என்றும் கூட அவசரப்பட்டு டிவிட் செய்தனர்.

ராஜஸ்தான் சொதப்பல்

ராஜஸ்தான் சொதப்பல்

இந்த சீசனில் ராஜஸ்தான் சரியாக ஆடவில்லை. 8 போட்டிகளில் 3 போட்டியில் மட்டுமே ராஜஸ்தான் வென்றுள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டன்சி சரியில்லை. அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் பேட்ஸ்மேனாகவும் சரியான பார்மில் இல்லை. இதனால்தான் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்று பொய்யான செய்திகள் வெளியானது.

ஆனால் உண்மை என்ன

ஆனால் உண்மை என்ன

ஆனால் அதன்பின் ராஜஸ்தான் அணி டிவிட்டர் பக்கம் இதுகுறித்து விளக்கம் கொடுத்தது. தவறான புகைப்படத்தால் வதந்தி பரவிவருகிறது என்று ராஜஸ்தான் டிவிட்டர் பக்கம் விளக்கம் கொடுத்தது. அதன்பின் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில் ஸ்டீவ் ஸ்மித் புகைப்படத்தை பகிர்ந்த ராஜஸ்தான் அணி, கேப்டன் என்று குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Story first published: Friday, October 16, 2020, 18:27 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+