Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கதையே முடிய போகிறது.. அவசரப்பட்டு கேப்டன்சியை துறந்த தினேஷ் கார்த்திக்.. வசமாக மாட்டிக்கொண்டார்!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகி இருக்கிறார்.தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு அவருக்கே எதிராக திரும்ப கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

நேற்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் தினேஷ் கார்த்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்றார். நேற்று முதல் போட்டியிலேயே இயான் மோர்கன் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தோல்வி

தோல்வி

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய கொல்கத்தா அணி படுதோல்வி அடைந்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 148 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் கும்மின்ஸ், மோர்கன் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. இதனால் மும்பை எளிதாக 16.5 ஓவரில் 2 விக்கெட்டிற்கு 149 ரன்கள் எடுத்து வென்றது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

நேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய தினேஷ் கார்த்திக் அதற்கு முக்கியமான காரணத்தை குறிப்பிட்டு இருந்தார். அதில், நான் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய தனிப்பட்ட பேட்டிங்கில், விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். கேப்டனாக அதை செய்ய முடியாது. அதனால் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்கிறேன், என்று தினேஷ் கார்த்திக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது தன்னுடைய தனிப்பட்ட பேட்டிங் பார்மை சரி செய்ய வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் முடிவு செய்துள்ளார். இதனால்தான் அவர் நேற்று நடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக 4வது இடத்தில் பேட்டிங் இறங்கினார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இத்தனை நாட்கள் தினேஷ் கார்த்திக் சரியாக பேட்டிங் செய்தாலும், செய்யா விட்டாலும் அணியில் தொடர்ந்து இருந்து வந்தார். கேப்டன் என்ற காரணத்தால் கொல்கத்தா அணியில் இவரின் பேட்டிங்கை யாரும் கேள்வி கேட்கவில்லை. மோசமாக ஆடினாலும் அணியை வெற்றிபெற வைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இனிமேல் எப்படி

இனிமேல் எப்படி

ஆனால் இனிமேல் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டன் கிடையாது. இதனால் அவர் சரியாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்கு முன் நடந்த போட்டிகளில் ஆடியது போல ஏனோ தானோ என்று ஆட முடியாது. வரிசையாக சொதப்பினால் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே கடினம். மொத்தமாக இவரை நீக்க கூட வாய்ப்புள்ளது.

நேற்று எப்படி

நேற்று எப்படி

நேற்று பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் சரியாக ஆடவில்லை. தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆட விரும்பி மோசமாக சொதப்பினார். தேவையில்லாத ஷாட் அடிக்க முயன்று அவுட் ஆனார். 8 பந்துகள் பிடித்த தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

நீக்கம்

நீக்கம்

இவர் கேப்டன் கிடையாது என்பதால் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பினால் இவரை அணியில் இருந்து நீக்க கூட வாய்ப்புள்ளது. முன்பு கேப்டன் என்பதால் பிரஷரை காரணம் காட்டி தப்பித்து வந்தார் தினேஷ் கார்த்திக். இனிமேல் அப்படி எந்த விதமான காரணத்தையும் சொல்லி தப்பிக்க முடியாது. தினேஷ் கார்த்திக் உடனே சரியாக ஆட வேண்டும் இல்லையென்றால் அணியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

Story first published: Saturday, October 17, 2020, 10:35 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+