Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாராவது இவ்ளோ ஜெயிச்சிட்டு இப்படி பண்ணுவாங்களா? தினேஷ் கார்த்திக்கை விளாசிய முன்னாள் வீரர்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரில் பெரிய சர்ச்சையாக, விவாதப் பொருளாக இருந்தது தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் இருந்து பாதியில் விலகியது தான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக முதல் பாதி வரை செயல்பட்ட அவர் பாதி தொடரில் இயான் மார்கனிடம் கேப்டன்சியை கொடுத்தார்.

அது குறித்து தற்போது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அதனால் தான் கொல்கத்தா அணி பிளே-ஆஃப் கூட முன்னேறவில்லை என அவர் கூறி உள்ளார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையில் ஆடியது. இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் அணியில் துணை கேப்டனாக மட்டுமே ஆடினார். முதல் பாதி முழுவதும் தினேஷ் கார்த்திக் மீது விமர்சனம் எழுந்து வந்தது.

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

எனினும், முதல் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தினேஷ் கார்த்திக் அப்போது கேப்டன்சியை இயான் மார்கனுக்கு அளித்தார். ஆனால், பலரும் அது தவறான முடிவு எனக் கூறினர்.

தவறான முடிவு

தவறான முடிவு

கொல்கத்தா அணியின் எதுவும் மோசமாக நடக்காத நிலையில் ஏன் பாதி தொடரில் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அது தவறான முடிவு என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த ஏழு போட்டிகளில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று கொல்கத்தா அணி நூலிழையில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இது பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா முதல் ஏழு போட்டியில் நான்கு வெற்றிகள் பெற்ற பின் அவர் கேப்டன்சியை விட்டுக் கொடுத்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அடுத்த ஏழு போட்டிகளில் அதை அவர் அப்படியே செய்து இருந்தால் கொல்கத்தா அணி பிளே-ஆஃப் முன்னேறி இருக்கும் என்றார்.

அவர் செய்திருப்பாரா?

அவர் செய்திருப்பாரா?

பாதி தொடரில் அவராகவே கேப்டன்சியை விட்டுக் கொடுத்ததாக கூறுகிறார்கள். அவர் அதை உண்மையில் செய்து இருப்பாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். கொல்கத்தா நிர்வாகம் அவரை கட்டாயப்படுத்தி இதை செய்து இருக்கும் என கூறப்படுவதை ஆகாஷ் சோப்ரா சுட்டிக் காட்டி இருக்கிறார்.

Story first published: Sunday, November 22, 2020, 18:19 [IST]
Other articles published on Nov 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+