Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரர்களுக்கு என்ன ஆனது.. உறைந்து போன ரசிகர்கள்.. என்ன நடக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணியில்?

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் முக்கியமான சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த வருடம் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருடம் அந்த வெற்றியை தக்க வைக்க போராடிக்கொண்டு இருக்கிறது.

அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் வீரர்கள் இந்த முறை முழு பார்மில் இருக்கிறார். அணிக்கு புதிதாக வந்திருக்கும் வீரர்கள் பெரிய அளவில் அணிக்கு வலிமை சேர்த்துள்ளனர்.

எத்தனை போட்டிகள்

எத்தனை போட்டிகள்

இதுவரை 9 போட்டிகளில் ஆடி இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது. மூன்று போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. மும்பை அணியின் பேட்டிங், பவுலிங் என்று எல்லாமே மிகவும் வலிமையானதாக இருக்கிறது. அணியில் இருக்கும் எல்லா வீரர்களும் பார்மில் இருப்பதால் அந்த அணி அசைக்க முடியாத வலிமையுடன் இருக்கிறது.

பேட்டிங்

பேட்டிங்

மும்பை அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் மிகவும் வலிமையாக உள்ளது. டி காக், ரோஹித் சர்மா, பாண்டியா, சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான், குர்னால், பொல்லார்ட் என்று பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது. இன்னொரு பக்கம் பும்ரா. பாட்டின்சன், நாதன் நைல், டிரெண்ட் போல்ட், ராகுல் சாகர், பொல்லார்ட், குர்னால் என்று மும்பை அணியில் இருக்கும் பவுலர்களும் முழு பார்மில் உள்ளனர்.

எப்படி

எப்படி

இதன் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலிமையான அணியாக உள்ளது. ஆனால் தற்போது அந்த வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் முக்கியமான சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அணியில் இருக்கும் 3 முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவதாக கூறுகிறார்கள்.

காயம்

காயம்

முக்கியமாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முழு பிட்னசில் இல்லை. அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில முக்கியமான வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதுவும் சொல்லவில்லை. மூன்று வீரர்கள் இப்படி காயம் காரணமாக அவதிப்படலாம் என்று கூறப்படுகிறது.

உறுதி செய்யப்படவில்லை

உறுதி செய்யப்படவில்லை

ஆனால் இது தொடர்பாக தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். யாருக்கு எல்லாம் காயம் ஏற்பட்டது என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

விளக்கம்

விளக்கம்

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கம் பரபரப்பாக காணப்படுகிறது. நாளை ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக பொல்லார்ட் செயல்படுவார் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை. நாளை மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவை எதிர்கொள்ள உள்ளது.

Story first published: Thursday, October 22, 2020, 15:15 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+