For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரீட் செய்துவிட்டனர்.. பிராவோ மட்டுமல்ல .. இனி யாரும் எதுவும் செய்ய முடியாது.. சிஎஸ்கேவிற்கு சிக்கல்!

துபாய்: சிஎஸ்கே வீரர்கள் பலரும் 2020 ஐபிஎல் சீசனில் மோசமாக சொதப்ப என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கே அணி தொடர் தோல்விகள் காரணமாக மனதளவில் துவண்டு போய் உள்ளது. அதிலும் கடைசியாக கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிக்கு எதிராக அடைந்த தோல்வி சிஎஸ்கே அணியை பெரிய அளவில் உடைத்து போட்டுள்ளது.

இனி வரும் போட்டிகளில் வரிசையாக வெற்றிபெற வேண்டிய அழுத்தம் அணிக்கு இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சிஎஸ்கே எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

காரணம்

காரணம்

இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் பலரும் 2020 ஐபிஎல் சீசனில் மோசமாக சொதப்ப என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. சிஎஸ்கேவில் கிட்டத்தட்ட எல்லா வீரர்களும் பார்மிற்கு திரும்பி விட்டனர். ஒரு பக்கம் வாட்சன், டு பிளசிஸ் பார்மில் உள்ளனர். இன்னொரு பக்கம் ராயுடுவும் பார்மில்தான் இருக்கிறார். இதெல்லாம் போக ஜடேஜா பார்மில் இருக்கிறார்.

வேறு யார்

வேறு யார்

அதேபோல் பிராவோ, சரத்துல் தாக்கூர் ஆகியோரும் பார்மில் இருக்கிறார்கள். தோனியும் கூட அதிரடியாக ஆடும் எண்ணத்தில்தான் இருக்கிறார். ஆனாலும் இவர்கள் யாரும் களத்தில் சரியாக ஆடுவது இல்லை. பார்மில் இருந்தும் கூட பேட்ஸ்மேன்கள் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. இன்னொரு பக்கம் பவுலர்களும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுப்பது இல்லை. இதற்கு முக்கியமான காரணம் உள்ளது.

ரீட் செய்துவிட்டனர்

ரீட் செய்துவிட்டனர்

எல்லா வீரர்களின் டெக்னிக்கையும் எதிரணி வீரர்கள் ரீட் செய்துவிட்டனர் என்பதுதான் வீரர்கள் களத்தில் சொதப்ப முக்கிய காரணமாக உள்ளது. அதாவது வீரர்களின் டெக்னிக் எப்படி இருக்கும், சிஎஸ்கேவின் திட்டம் எப்படி இருக்கும் என்று எளிதாக கணித்துவிட்டனர். வாட்சன் களத்திற்கு வந்தாலே லெக் ஸ்பின்னர்களை களத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஸ்பின் பவுலிங்கில் வாட்சன் ஆட மாட்டார் என்பது தெரியும் என்பதால் எளிதாக அவரை அவுட் செய்து விடுகிறார்கள்.

எளிதாக அவுட் செய்கிறார்கள்

எளிதாக அவுட் செய்கிறார்கள்

அதேபோல் ஒவ்வொரு வீரருக்கும் என்ன வீக்னஸ் எங்கே எப்படி திட்டமிடுகிறார்கள். எப்படி ஆடுவார்கள் என்பதை 7 அணிகளும் மிக எளிதாக கணித்துவிட்டனர். இதனால் சிஎஸ்கே திட்டங்கள் எல்லாம் மிக எளிதாக சொதப்பி விடுகிறது. அதிலும் 15 ஓவருக்கு பின்தான் சிஎஸ்கேவினர் நன்றாக பேட்டிங் செய்வார்கள் என்பதால் அதற்கு முன்பே மொத்தமாக சிஎஸ்கேவை மற்ற அணியினர் அடக்கி விடுகிறார்கள்.

தோனியின் பிளான்

தோனியின் பிளான்

இதெல்லாம் போக தோனி எங்கே பீல்டிங் நிற்க வைப்பார். எப்படி ஓவர் கொடுப்பார். யாரை எல்லாம் அணியில் எடுப்பார் என தொடங்கி எல்லாம் மிகவும் எளிதாக கணிக்கும் வகையில்தான் இருக்கிறார். இதனால்தான் கடந்த கொல்கத்தா போட்டியில் தினேஷ் கார்த்திக் முதல் பத்து ஓவரில் ரசல் மற்றும் நரேனுக்கு ஓவரே கொடுக்கவில்லை.

திட்டங்கள் கணிப்பு

திட்டங்கள் கணிப்பு

தோனியின் திட்டங்களை எளிதாக கணித்துதான் தினேஷ் கார்த்திக் இப்படி திட்டங்களை வகுத்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். முக்கியமாக பிராவோ, சாஹர் எப்படி ஓவர் போடுவார்கள் என்பதையும் கணித்துவிட்டனர். இதனால்தான் அவர்களின் ஓவரில் விக்கெட்டும் விழுவதும் இல்லை, ரன்னும் அதிகமாக செல்கிறது. பிராவோ அணிக்குள் வந்த பின் பெரிய அளவில் மேட்ச் வின்னராக மாறவில்லை .

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

இதனால் சிஎஸ்கே இனிவரும் போட்டிகளில் மொத்தமாக பிளானை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் பிளான்களை இப்போதெல்லாம் களத்தில் கணிக்க முடிவது இல்லை. அதேபோல்தான் தோனியும் கணிக்கவே முடியாத பிளான்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Story first published: Monday, October 12, 2020, 17:44 [IST]
Other articles published on Oct 12, 2020
English summary
IPL 2020: Almost all the teams learned the techniques of CSK and its players.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+