சின்ன பையன் கூப்பிட்டு நான் வரணுமா? ஈகோ தலைக்கு ஏறிய ராயுடு.. களத்தில் நடந்த சம்பவம்.. புது சிக்கல்!
துபாய்: நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அம்பதி ராயுடு நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. வெற்றிபெற வேண்டும் என்ற மனப்பான்மை கொஞ்சமும் இன்றி சிஎஸ்கே வீரர்கள் ஆடியது பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
அதிலும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் நேற்று மிக மோசமாக பேட்டிங் செய்ததும், சிங்கிள் எடுப்பதற்கும் கூட அலுப்பு பட்டதும் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. நேற்று சிஎஸ்கேவின் தோல்விக்கு ஒன் டவுன் வீரர் அம்பதி ராயுடுவும் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறார்.

என்ன செய்தார்
நேற்று நடந்த போட்டியில் அம்பதி ராயுடு நான்காவது ஓவரில் பேட்டிங் இறங்கினார். நான்காவது ஓவரில் இருந்து அவர் அவுட்டாகும் வரை.. களத்தில் தூங்கி வழிந்தபடிதான் இருந்தார். ஏனோ பேட்டிங் செய்ய விருப்பம் இன்றி இவர் நேற்று ஆடினார். அதேபோல் ரன் ஓடுவதற்கும் விருப்பம் இன்றி ஓடினார்.

மோசம்
பல இடங்களில் இரண்டு ரன்கள் ஓட வாய்ப்பு இருந்தும் கூட இவர் ஒரு ரன் ஓடியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. அதிலும் என் ஜெகதீசன் ஒரு பக்கம் வேகமாக ஓடும் போது ராயுடு இன்னொரு பக்கம் ஆமை வேகத்தில் நடந்து சென்றார். இந்த நிலையில் நேற்று ராயுடு ஈகோ காரணமாகவே ஓடவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ன நடந்தது
நேற்று 8வது ஓவரில் ராயுடு பேட்டிங் ஆடும் போது சிங்கிள் அடித்துவிட்டு ஓடினார். அப்போது இரண்டு ரன்கள் எடுப்பதற்கும் ஏற்ற சூழ்நிலை நிலவியது. ஜெகதீசனும் வேகமாக ஓடிவிட்டு இரண்டாவது ரன் ஓடி வரும்படி அழைத்தார். ஆனால் வேண்டும் என்றே திமிராக அம்பதி ராயுடு இரண்டாவது ரன் ஓடி வரவில்லை. சின்ன பையன் கூப்பிட்டு நான் எப்படி ஓடி வருவேன்.. என்பது போல திமிராக செயல்பட்டார்.

மீண்டும்
ஜெகதீசன் சொன்னபடி செய்ய முடியாது என்பது போல ராயுடு செயல்பட்டார். இரண்டு பேருக்கும் நேற்று பெரிய கெமிஸ்டிரியும் இல்லை. அதன்பின் விரைவில் ஜெகதீசன் ரன் அவுட் ஆனார். அதன்பின் தோனி இறங்கிய போது இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதும் தோனி இதேபோல் இரண்டு ரன்கள் ஓடி வரும்படி அழைத்தார். இந்த முறை தோனி அழைத்ததும் அம்பதி ராயுடு வேகமாக இரண்டாவது ரன் எடுத்தார்.

சர்ச்சை
இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. ஜெகதீசன் கூப்பிட்ட போது ராயுடு வரவில்லை. ஆனால் இப்போது தோனி கூப்பிட்டால் மட்டும் ஓடி வருகிறார். இது எல்லாம் திமிர் இல்லாமல் வேறு என்ன ? என்று இணையத்தில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சிஎஸ்கேவில் அப்படி என்னதான் பிரச்சனை என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications