Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேவையில்லாமல் பில்டப் கொடுத்த வீரர்.. செக் வைத்த விதி.. இனி ஆடுவது சந்தேகம்தான்.. வசமாக சிக்கினார்!

துபாய்: ஐபிஎல்லையே புரட்டி போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாம்பவான் வீரர் ஆண்ட்ரு ரசல் இன்று நடக்கும் போட்டியில் விளையாடுவாரா என்பதே சந்தேகம் ஆகியுள்ளது. இனி வரும் போட்டிகளில் அவரை கொல்கத்தா அணி எடுக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றி தோல்விகளுடன் ஆடி வருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் கொல்கத்தா தோல்வி அடைந்தது.

ஆனால் அதன்பின் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதுவரை மொத்தம் 9 போட்டிகளில் ஆடி இருக்கும் கொல்கத்தா 5 போட்டிகளில் வென்றுள்ளது. வலிமையான பெங்களூர் அணியை இன்று கொல்கத்தா எதிர்கொள்ள உள்ளது.

எப்படி

எப்படி

கொல்கத்தா அணியில் இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ஆண்ட்ரு ரசல்தான். கடந்த இரண்டு வருடமும் கொல்கத்தா அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர்தான் ரசல். பஞ்சாப் அணிக்கு கெயில் போல கொல்கத்தா அணிக்கு ரசல் இருந்தார்.இரண்டு சீசன்களிலும் இவர் மாஸ் ஆட்டம் ஆடி பவுலர்களை அச்சுறுத்தினார்.

மோசம்

மோசம்

இதனால் இந்த வருட சீசனில் ரசல் மீது அதிக கவனம் வைக்கப்பட்டது. ரசல் இந்த சீசனில் நன்றாக ஆடுவர். கொல்கத்தா அணிக்கு பெரிய அளவில் மேட்ச் வின்னராக இருக்க போகிறார் என்று கருதப்பட்டது. தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள்.. ரசலுக்கு பவுலிங் போடும் முன் கடவுளை வேண்டிவிட்டு போடுங்கள் இல்லையென்றால் ரசல் விக்கெட்டை நீங்கள் எடுக்க முடியாது, என்று பேசி இருந்தனர்.

பில்டப் கொடுத்தார்

பில்டப் கொடுத்தார்

இந்த சீசனுக்கு முன் ரசலுக்கு பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால் ரசல் இந்த சீசனிலில் எந்த போட்டியிலும் அதிரடியாக ஆடவில்லை. அணியில் இருக்கும் பேட் கும்மின்ஸை விட மிக மோசமாகவே ரசல் இந்த முறை பேட்டிங் செய்து இருக்கிறார். பவுலிங்கிலும் ரசல் பெரிய அளவில் மாயாஜாலம் செய்யவில்லை. இதனால் மொத்தமாக ரசல் இந்த முறை கொல்கத்தா அணிக்காக எதுவும் செய்யவில்லை.

செய்யவில்லை

செய்யவில்லை

இன்னொரு பக்கம் இரண்டு போட்டிகளுக்கு முன் ரசலுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ரசல் துடித்து போனார். கடந்த போட்டியில் இதே காயத்துடன்தான் ரசல் ஆடினார். கடந்த போட்டியில் ரசல் சரியாக பந்து வீச முடியவில்லை. சரியாக பீல்டிங்கும் செய்யவில்லை. பேட்டிங்கிலும் சொதப்பினார். காயம் காரணமாக ஆட முடியவில்லை.

பிட்னஸ் இல்லை

பிட்னஸ் இல்லை

இதனால் அடுத்த சில போட்டிகளில் ஆட ரசல் பிட்டாக இல்லை என்று கூறுகிறார்கள். ரசல் காலில் காயம் ஆறவில்லை. இனி சில போட்டிகளில் ரசல் ஆடுவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். இவருக்கு ஓவராக பில்டப் கொடுத்த நிலையில், தற்போது கொடுத்த பில்டப் எல்லாம் வீணாகி உள்ளது. வலிமையான பெங்களூர் அணியை இன்று கொல்கத்தா எதிர்கொள்ள உள்ளது. ஆனால் அணியில் ரசல் இல்லை என்பது கொல்கத்தாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நரேன் மீண்டும்

நரேன் மீண்டும்

இதனால் ரசலுக்கு பதிலாக நரேன் மீண்டும் அணியில் இணைவார் என்று கூறுகிறார்கள். தவறான பவுலிங் ஆக்சனால் விளையாடாமல் போன நரேன் இன்று மீண்டும் ஆட உள்ளார். கொல்கத்தா அணியில் ஏற்கனவே பெர்குசான் இருக்கிறார். இயான் மோர்கன், பேட் கும்மின்ஸ் இருவரும் அணியில் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா சார்பாக ஆடுவார்கள் என்கிறார்கள்.

Story first published: Wednesday, October 21, 2020, 10:44 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+