Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அருவருப்பான கமெண்ட்.. ஆர்சிபி போட்டியால் மீண்டும் சர்ச்சையில் அனுஷ்கா.. கடுமையான கோபத்தில் கோலி!

மும்பை: பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் நேற்று பெங்களூர் அணி தோல்வி அடைந்த காரணத்தால் கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மீது தற்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மூன்று முக்கியமான காரணங்களுக்காக அனுஷ்காவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் மண்ணை கவ்வியது. தொடக்கத்தில் நன்றாக ஆடிய பெங்களூர், போக போக போட்டியை தூக்கி பஞ்சாப்பிற்கு தாரை வார்த்தது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பெங்களூர் அணி 17 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பெங்களூர் தோல்வி

பெங்களூர் தோல்வி

இந்த போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்த காரணத்தால் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அவரின் கேப்டன்சி சரியில்லை. அவரின் பேட்டிங் மிக மோசமாகிவிட்டது. அதோடு அவரின் பீல்டிங்கும் மிக மோசமாக இருக்கிறது. கோலி உடனே தனது தவறுகளை சரி செய்ய வேண்டும் என்று கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

விமர்சனம் எப்படி

விமர்சனம் எப்படி

அதோடு அனுஷ்கா மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனங்கள் எல்லாம் தொடங்கியது கவாஸ்கர் நேற்று செய்த வர்ணனையில் இருந்துதான். நேற்று பெங்களூர் தோல்வி அடைந்த நிலையில் கவாஸ்கர் தனது வர்ணனையில், கோலி சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவர் மிக மோசமாக சொதப்பிவிட்டார். லாக்டவுன் நேரத்தில் கோலி சரியாக பயிற்சி செய்யவில்லை.

என்ன குறிப்பிட்டார்

என்ன குறிப்பிட்டார்

அனுஷ்காவின் பந்துகளில் அவர் பயிற்சி செய்து இருப்பார், என்று கவாஸ்கர் கூறி இருந்தார். அனுஷ்காவை பவுலிங் செய்ய சொல்லி அதில் கோலி பயிற்சி எடுத்து இருப்பார் என்று பொருள்படும் வகையில் கவாஸ்கர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரின் வாசகம் இரட்டை அர்த்தத்தில் இருந்ததால் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதான் அனுஷ்கா மீதான விமர்சனத்தின் தொடக்கம்.

விமர்சனம்

விமர்சனம்

இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், கோலியின் மோசமான ஆட்டத்திற்கு அனுஷ்காதான் காரணம் என்று கூற தொடங்கினார்கள். கவாஸ்கரை விமர்சிப்பதை விட்டுவிட்டு அனுஷ்காவை விமர்சனம் செய்தனர். அனுஷ்கா மீதான கவனம் காரணமாக கோலியின் ஆட்டம் முன்பு போல இல்லை. அவர் குடும்பஸ்தன் ஆகிவிட்டார். அதனால் அந்த வெறி இல்லை. கோலியின் பார்ம் அவுட்டிற்கு கூட அனுஷ்காதான் காரணம் என்று பலர் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர்.

விசாரணை செய்ய வேண்டும்

விசாரணை செய்ய வேண்டும்

அதேபோல் இன்னொரு பக்கம் அனுஷ்கா சர்மா தீபிகா படுகோனுக்கு நெருக்கமானவர். தீபிகா படுகோன் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக இருக்கும் போதை பொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார். அதனால் அனுஷ்கா சர்மாவையும் இதில் விசாரிக்க வேண்டும். தீபிகா படுகோனுக்கு நெருக்கமானவர் என்பதால், அனுஷ்காவை விசாரிக்க வேண்டும் என்றும் கூட மோசமான கருத்துக்களை சில நெட்டிசன்கள் வைத்து வருகிறார்கள்.

நியாயம்

நியாயம்

இந்த பிரஷர்தான் கோலி சரியாக ஆட முடியாமல் போனதற்கு காரணம். அனுஷ்காதான் கோலியின் சரிவிற்கு காரணம் என்று மொத்தமாக அனுஷ்கா மீது பலர் பழியை போட்டுள்ளனர். ஆனால் சிலர் இதில் அனுஷ்காவை இழுப்பது தவறு. இந்த தோல்வியை பயன்படுத்தி கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் மீது போதை பொருள் குற்றச்சாட்டு எல்லாம் செய்வது மிக தவறு என்று நியாயமாக பேசி உள்ளனர்.

கோலி வெளிப்படை

கோலி வெளிப்படை

சரியாக சொல்ல வேண்டும் என்றால் பெங்களூரின் தோல்விக்கு அனுஷ்கா எந்த வகையிலும் காரணம் இல்லை. இதை கடந்த வருடமே கோலி உறுதியாக கூறிவிட்டார். என் மனைவியை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் என்னுடைய வெற்றிகளுக்கும், பாசிட்டிவிட்டிக்கும் எப்போதும் அனுஷ்காதான் காரணம் என்று கோலியே வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 25, 2020, 20:48 [IST]
Other articles published on Sep 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+