Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை பற்றி ஏன் பேசினீர்கள்? கமெண்டரியில் கொச்சையாக பேசிய கவாஸ்கர்.. விளாசித் தள்ளிய அனுஷ்கா சர்மா!

துபாய்; நேற்று பெங்களூர் மற்றும் பஞ்சாப்பிற்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கவாஸ்கர் செய்த வர்ணனை பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதற்கு தற்போது நடிகை அனுஷ்கா சர்மா அதிரடி பதில் அளித்துள்ளார்.

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

நேற்று பெங்களூர் தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், கோலி குறித்தும், அவரின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா குறித்தும் பேசியதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம். இவர் பேசிய சில வார்த்தைகள் வரம்பு மீறி இருந்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது..

கருத்து எதிர்ப்பு

கருத்து எதிர்ப்பு

நேற்று கவாஸ்கர் தனது வர்ணனையில், கோலி சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவர் மிக மோசமாக சொதப்பிவிட்டார். லாக்டவுன் நேரத்தில் கோலி சரியாக பயிற்சி செய்யவில்லை. அனுஷ்காவின் பவுலிங்கில் அவர் பயிற்சி செய்து இருப்பார், என்று காவஸ்கர் கூறி இருந்தார். அனுஷ்காவை பவுலிங் செய்ய சொல்லி அதில் கோலி பயிற்சி எடுத்து இருப்பார் என்று பொருள்படும் வகையில் கவாஸ்கர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்துதான் தற்போது பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

பதில் அளித்தார்

பதில் அளித்தார்

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், மிஸ்டர் கவாஸ்கர், உங்கள் கருத்து தவறானது. ஒரு நபரின் விளையாட்டு போட்டி குறித்து பேசும் போது அவரின் மனைவி குறித்து இப்படி பேசியது ஏன் என்று நீங்கள் விளக்க வேண்டும். உங்களின் விளக்கத்தை கேட்க நான் காத்து இருக்கிறேன்.. ஏன் ஒரு கணவரின் ஆட்டத்திற்கு அவரின் மனைவி குறித்து இப்படி பேசுகிறார்கள்.

நீங்கள் கிரிக்கெட்

நீங்கள் கிரிக்கெட்

இத்தனை நாட்கள் நீங்கள் கிரிக்கெட் குறித்து கமெண்ட் செய்யும் போது, கிரிக்கெட் வீரர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து பேசவில்லை என்று நம்புகிறேன். அதேபோல் நேற்று கமெண்டரி செய்யும் போது நீங்கள் எனக்கும், என்னுடைய குடும்ப வாழ்க்கைக்கும் ஏன் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

ஏன் ?

ஏன் ?

என்னுடைய கணவரின் கிரிக்கெட் குறித்து பேச உங்களிடம் கண்டிப்பாக நிறைய வார்த்தைகள், வரிகள் இருந்து இருக்கும். அப்படி இருந்தும் நீங்கள் என்னுடைய பெயரை பயன்படுத்தியது ஏன்? என் பெயரை பயன்படுத்தினால் மட்டும்தான் உங்கள் வர்ணனை அர்த்தம் பெறுமா? இது 2020ம் வருடம் .. இன்னும் எதுவும் மாறவில்லை. என் கணவரின் கிரிக்கெட் குறித்து பேச இன்னும் எத்தனை நாளுக்கு என்னை விமர்சனம் செய்ய போகிறீர்கள்.

கோபமான கேள்வி

கோபமான கேள்வி

நீங்கள் அதிரடி கருத்துக்களை தெரிவிக்க நான்தான் கிடைத்தேனா? மிஸ்டர் கவாஸ்கர் நீங்கள் ஒரு லெஜெண்ட் . இந்த கிரிக்கெட் உலகில் நீங்கள் பெரிய உயரத்தில் இருப்பவர். நீங்கள் அப்படி சொல்லிய போது, நான் எப்படி உணர்தேன் என்பதை உங்களிடம் கூறிவிட்டேன்., என்று அனுஷ்கா சர்மா மிகவும் கோபமாக கருத்து தெரிவித்து உள்ளார்.

Story first published: Friday, September 25, 2020, 18:54 [IST]
Other articles published on Sep 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+