Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த முறை விடக்கூடாது.. அவர் ஓவரை மட்டுமே குறி வைத்து வெளுத்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்.. என்ன நடந்தது?

துபாய்: சிஎஸ்கே அணியில் இன்று விளையாடிய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் டெல்லி அணியின் பவுலர் அஸ்வினின் ஓவரை மட்டும் குறி வைத்து அடித்து வெளுத்தனர்.

டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

அணியில் இருந்து இன்று பியூஸ் சாவ்லா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அணிக்குள் மீண்டும் கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே ஓப்பனிங்

சிஎஸ்கே ஓப்பனிங்

இன்று சிஎஸ்கே அணிக்காக சாம் கரன் ஓப்பனிங் இறங்கினார். முதல் ஓவரிலேயே அதிரடியாக ஆட நினைத்த சாம் கரன் தேவையில்லாமல் சுற்றினார். சிக்ஸ் செல்ல வேண்டிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய வாட்சன், டு பிளசிஸ் தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் போக போக அதிரடி காட்டினார்கள்.

அதிரடி

அதிரடி

கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்த வாட்சன், டு பிளசிஸ் போக போக டெல்லி பவுலர்கள் பந்தை வெளுக்க தொடங்கினார்கள். முக்கியமாக அஸ்வின் ஓவரை மட்டும் குறி வைத்து சிஎஸ்கே பவுலர்கள் அதிரடி காட்டினார்கள். அஸ்வின் போட்ட 8வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சென்றது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த ஓவர்களில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அஸ்வின் ஓவரை காலி செய்தனர்.

காலி செய்தனர்

காலி செய்தனர்

அஸ்வின் போட்ட 10வது ஓவரில் மட்டும் 15 ரன்கள் சென்றது. இதில் மொத்தம் வாட்சன், டு பிளசிஸ் சேர்த்து 4 பவுண்டரிகள் அடித்தனர். அதன்பின் அஸ்வின் போட்ட 14வது ஓவரில் சிஎஸ்கே 11 ரன்கள் எடுத்தது. இதில் கோபமாக இருந்த ராயுடு சிக்ஸ் அடித்தார். டு பிளசிஸ், ராயுடு, வாட்சன் என்று மூன்று பேருமே அஸ்வின் ஓவரை குறி வைத்து வெளுத்து வாங்கினார்கள்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

இதற்கு முன் நடந்த போட்டிகளில் எல்லாம் எல்லாம் அஸ்வின் நன்றாக பந்து வீசினார். ஆனால் இன்று சிஎஸ்கேவின் அவரின் பவுலிங் பலிக்கவில்லை. அஸ்வினின் பவுலிங் ஸ்டைல் சிஎஸ்கேவில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. எளிதாக கணிக்க கூடிய வகையிலேயே அவரின் பவுலிங் இருந்தது. அஸ்வின் ஓவரில் வெளுத்து வாங்கிய டு பிளசிஸ் மொத்தமாக 47 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் வாட்சன் 28 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.

கடந்த மேட்ச்

கடந்த மேட்ச்

ஒரு காலத்தில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய அஸ்வினை இன்று சிஎஸ்கே வீரர்களே அடித்து துவைத்தனர். கடந்த போட்டியில் அஸ்வின் காயம் காரணமாக சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட முடியவில்லை. இதனால் இன்று கூடாது என்று அஸ்வின் ஓவரை வைத்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் காட்டு காட்டு என்று காட்டியுள்ளனர்.

Story first published: Saturday, October 17, 2020, 21:16 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+