இதுவே கடைசியாக இருக்கட்டும்.. பகிரங்கமாக அறிவித்த அஸ்வின்.. எழுந்து நின்ற பாண்டிங்.. பரபர சம்பவம்
துபாய்: நேற்று பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் செய்த காரியம் ஒன்று கிரிக்கெட் உலகில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றது. டெல்லியில் இந்த முறையும் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் சிறப்பாக ஓப்பனிங் கொடுத்தனர். இதன் மூலம் நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி 20 ஓவரில் 196 ரன்கள் எடுத்தது.
அதன்பின் இறங்கிய பெங்களூர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. விராட் கோலி மட்டுமே ஒரு பக்கம் அதிரடியாக ஆடி வந்தார். இதனால் பெங்களூர் வெறும் 137 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

அஸ்வின்
இந்த போட்டியில் அஸ்வின் போட்ட ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அஸ்வின் வீசிய மூன்றாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்து வந்தார். இன்னொரு பக்கம் ஆரோன் பின்ச் ரன்னர் எண்டில் இருந்தார். அஸ்வின் பந்து வீசும் போது, ஆரோன் பின்ச் கிரீசை தாண்டி நின்று கொண்டு இருந்தார்.

கிரீஸ்
ரன் ஓடுவதற்கு வசதியாக, பவுலிங் போடுவதற்கு முன்பே பின்ச் கிரீஸை தாண்டி நின்றார். இப்படி வீரர்கள் கிரீசை தாண்டி நின்றால் பவுலர்கள் அவர்களை விக்கெட் எடுக்க முடியும். இதை மன்கட் விக்கெட் என்று கூறுவார்கள். இதேபோல்தான் நேற்றும் பின்சை மன்கட் விக்கெட் எடுக்க அஸ்வின் முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் விக்கெட் எடுக்காமல்.. பாவம் பார்த்து விட்டுவிட்டார்.

வார்னிங்
அதோடு பின்சிற்கு ஒரு நிமிடம் அவர் வார்னிங் கொடுத்தார். இதை பார்த்து திகைத்து போன டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் சிரித்துக் கொண்டே எழுந்து நின்றார். மன்கட் விக்கெட் முறைக்கு எதிரானவர் பாண்டிங். இதனால் தனது அணியின் வீரர் மன்கட் விக்கெட் எடுப்பதை கண்டிப்பாக அவர் அனுமதிக்கமாட்டார். இதனால்தான் அஸ்வினும் நேற்று மன்கட் விக்கெட் எடுக்கவில்லை.

டிவிட்
இதையடுத்து டிவிட் செய்த அஸ்வின், இதை இப்போதே தெளிவாக்கிக் கொள்வோம். 2020ம் வருடத்தில் நான் கொடுக்கும் முதல் மற்றும் கடைசி வார்னிங் இது. இனிமேல் என் மீது பழி போட கூடாது. மன்கட் செய்துவிடுவேன் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இதில் அஸ்வின் பாண்டிங்கை டேக் செய்துள்ளார். ஆரோன் பின்ச்சும் நானும் நல்ல நண்பர்கள் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம்
கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின் மன்கட் விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் விக்கெட்டை அவர் மன்கட் முறையில் எடுத்தார். இது பெரிய அளவில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications